உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி: துளியாவது கவலை இருக்குதா பாரேன் இவனுக்கு.....நானூறு ரூபா இருக்கும்.....காணாமப் போயிட்டுது......கவலையத்து இருக்கிறான்.

காட்சி 5

இடம்:—வீராயி வீடு.

இருப்போர்:—வீராயி, கருப்பன்.

நிலைமை:—கருப்பன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனைத் தட்டி எழுப்புகிறாள் வீராயி.

வீராயி: துளியாவது கவலை இருந்தா இப்படியா தூக்கம் வரும். காலங்காத்தாலே எழுந்து போயி நாலு இடம் சுத்தி பிழைப்புக்கு வழி தேடுவோம் என்கிற எண்ணம் இருக்குதா. நாய் படாத பாடுபடறேன், ஈவு இரக்கம் இருக்குதா துளியாவது.

[தட்டி எழுப்பியபடி.]

எழுந்திரு, எழுந்திரு; விடிஞ்சி வேணநேரமாகுது.

[கருப்பன் புரண்டு புரண்டு படுக்கிறான். மீண்டும் வீராயி தட்டி எழுப்புகிறாள். கோபத்துடன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு.]

கரு: வீடா இது? அடா, அடா! அடா! ஏண்டி இப்படி உயிரை வாங்கறே....இப்ப எந்த ரயிலுக்கு நேரமாகுதுன்னு எழுப்பித் தொலைக்கறே. என்னமோ கடியாரத்தைப் பார்த்து வேலைக்குப் போயி காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கற உத்யோகம் கெட்டுவிடப் போகுதா......

வீராயி: (ஆத்திரமும் கேலியும் கலந்த குரலில்) உங்களுக்கு ஏங்க வேலை வெட்டி....நான் இல்லே உழைக்க! நீங்க படுத்துத் தூங்குங்க......வித்துவிசாரம் துளியாவது இருந்தா இப்படியா இருப்பிங்க......ராத்திரிக்கெல்லாம் சுத்தறது, பகலெல்லாம் படுத்துத் தூங்கறது. குடும்பம் உருப்பட்டு விடுமேல்லோ......

கரு: ஏண்டி இப்படிச் சபிச்சிக் கொட்டறே....உன் இழவுக்காகத்தான் ஆலாப்பறந்து பார்க்கறேன்.....வேலை கிடைச்சாத் தானே....போயி எங்காவது திருடவா...அதையாவது.

335