உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீ: (அழுகுரலில்) என் மனசை வேகவைக்காதே.....

[தலையணை அடியில் இருந்த அலங்காரப் பையைப் பார்த்துவிட்டு.]

இது என்னது?

[கருப்பன் பையைப் பிரித்துப் பார்க்கிறான். பணம் இருக்கக் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். அந்த நேரத்தில் கருப்பன் குடி இருக்கும் வீட்டுச் சொந்தக்காரன் வந்து சேருகிறான்.]

வீட்டுக்காரன்: வீராயி! எப்பவந்து கேட்டாலும் அவரு வரட்டும்னு சொல்லி நாளை ஓட்டினயே......இப்ப அவனும் இருக்கிறான்....எடு வாடகைப் பணத்தை. நானும் பொறுத்துப் பார்த்தாச்சி......இனி பணம் வாங்காமெ இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன். ஆமாம்.

கரு: (அலட்சியமாக) எவ்வளவய்யா வாடகை பாக்கி?

வீட்: பதினெட்டு ரூபா.......

[கருப்பன் அலங்காரப் பையை ஒருபுறம் வைத்துவிட்டு, எழுந்திருக்கிறான்; மடியிலிருந்து கடிகாரம் கீழே விழுகிறது. வீராயி ஆச்சரியமடைகிறாள். மறுகணம் திகிலடைகிறாள்.]

வீ: (திகிலுடன்) அடப்பாவி மனுஷா...இந்த வேலையும் ஆரம்பித்துவிட்டயா.....கடியாரம் சின்ன எஜமானருடையதாச்சே......

[வாயைப் பொத்திக் கொள்கிறாள், பயத்தால். அவள் பேசி வாய்மூடு முன்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைகிறார். கருப்பனிடமிருந்த கைகடியாரத்தை பறித்து கொள்கிறார். உடன் வந்திருந்த 'கான்ஸ்டபிளிடம்'.]

சப்: 'கரெக்டா' சொன்னார் வீராயிதான் திருடி இருப்பான்னு. சரியான சமயத்திலேதான் வந்தோம்.

வீ: (கலக்கத்துடன்) ஐயய்யோ! சாமி! நான் திருடலிங்க......சத்யமாச் சொல்றேன்.....

[வீட்டுக்காரர் மெள்ள நழுவி விடுகிறார்.]

சப்: (மிரட்டும் குரலில்) கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகுமா பொய் பேசறே.....நட ஸ்டேஷனுக்கு.......

[வீராயி பதறுகிறாள். கருப்பன் கலங்குகிறான்.]

336