உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

க: சாமி! அவ அப்படிப்பட்ட நடத்தைக்காரி இல்லிங்க...எத்தனையோ வருஷமா வேலை பார்க்கறா.....தப்பு தண்டா கிடையாதுங்க....நடந்ததே வேறேங்க...

சப்: ஏண்டா முழுப் பூசணிக்காயை சோத்திலே மறைக்கப் பார்க்கறே.....கண்ணாயிரம் ரூமிலே காலையிலே கூட்டப்போனவ வீராயிதானே......

கரு: (கண் கலக்கத்துடன்) அவ ஒரு பாவமும் அறியாதவ. இது, கடியாரம், நேத்து நடுராத்திரிலே இருந்து என்னிடம் இருக்குதுங்க....

[பையை எடுத்துக்காட்டி.]

இதையும் கைக்கடியாரத்தையும் கண்ணாயிரத்தய்யாவே தானுங்க எனக்குக் கொடுத்தாரு....

[சப்-இன்ஸ்பெக்டர் கருப்பன் கழுத்தில் ஒரு அடி கொடுத்து.]

சப்: சன்மானம் கொடுத்தாரா உனக்கு...ராஸ்கல்! தங்கச் செயின் போட்ட கடியாரத்தை...நீ பெரிய சீமான்...உனக்கு அவர் பரிசா கொடுத்தாரா......

[கான்ஸ்டபிளைப் பார்த்து.]

இழுத்துக்கொண்டு போ, வீராயியை....

கரு: தொடாதே! தொடாதே! கையை ஒடித்துவிடுவேன்...அவ உத்தமி. படாத பாடுபட்டு குடும்பத்தை நடத்திச் செல்கிற குணவதி. தான் பட்டினி கிடந்தாவது இந்தப் பாவியை காப்பாத்திய புண்யவதி. பிறர் சொத்துக்கு ஒருநாளும் அவ ஆசைப்படமாட்டா உழைப்பு, உழைப்பு, உழைப்பு.....என்னைக் கணவனாகக் கட்டிக்கொண்ட நாளா ஓயாத உழைப்புதான். ஒரு சுகமும் கண்டதில்லே! ஐயா! என்பேச்சிலே உங்களுக்கு நம்பிக்கையில்லை......சரிய்யா.....நம்பவேண்டாம்......சொத்துக் கிடைச்சுப்போச்சி. திருட்டுப் பட்டத்தை ஏத்துக்கொள்ளவும் ஒரு ஆள்தானே தேவை. நான் இருக்கறேன், எடுத்துக்கிட்டுப் போயி, அடியுங்க உதையுங்க ஆறுமாசம் ஜெயிலிலே தள்ளுங்க. ஆனா அந்த உத்தமியை மட்டும் ஒண்ணும் செய்யாதிங்கய்யா... என்னாலே அவ பட்ட கஷ்டம் போதும்யா...இந்த அவமானம் வேண்டாம்.....அவளுக்கு வேண்டாமய்யா, அவளுக்கு வேண்டாம்......

[வீராயி கசிந்துருகி கணவன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாள். தன்னை உத்தமி என்றும் புண்யவதி என்றும் கொண்டாடும் அளவு தன்னிடம் பாசம் கொண்டவராக

43

337