இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
168
24–4–59 | — | அண்ணாவின் தம்பியர் சென்னைப் பெருநகர் மன்ற ஆட்சிப் பொறுப்பினைப் பெறல். |
1–8–60 | — | இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை நிகழ்த்தல். |
1962 | — | ‘சம்பத்’ விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல். |
26–2–62 | — | சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல். |
2–8–62 | — | விலைவாசி உயர்வுப்போர்— வேலூர் சிறையில் பத்து வாரம். |
7–1–63 | — | சீனப்போர் குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கிலப் பேருரை |
17–11–63 | — | கட்டாய இந்தி–17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல்—16–11–63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத் தண்டனை ஏற்றல். |
1–3–67 | — | தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்பியருடன் 138 பேர் அமர்ந்திட அண்ணா தமிழக முதல்வர் பொறுப் பேற்றல். (6–3–67) |
14–8–67 14–4–67 |
— — |
முதலமைச்சர் வானொலிச் சொற்பொழிவு ‘தமிழ்நாடு’ பெயரிட்டுப் பெருமைதரல் |
10–1–68 | — | இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார், உள்ளத்துள் எல்லாம் நிற்றல். |
8–9–68 | — | அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமை பெறல். |
4–1–69 | — | கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் பொழிந்த கடைசிச் சிறப்புப் பொழிவு. |
2–2–69 | — | தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல் |