உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168


24–4–59 அண்ணாவின் தம்பியர் சென்னைப் பெருநகர் மன்ற ஆட்சிப் பொறுப்பினைப் பெறல்.
1–8–60 இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை நிகழ்த்தல்.
1962 ‘சம்பத்’ விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல்.
26–2–62 சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல்.
2–8–62 விலைவாசி உயர்வுப்போர்— வேலூர் சிறையில் பத்து வாரம்.
7–1–63 சீனப்போர் குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கிலப் பேருரை
17–11–63 கட்டாய இந்தி–17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல்—16–11–63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத் தண்டனை ஏற்றல்.
1–3–67 தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்பியருடன் 138 பேர் அமர்ந்திட
அண்ணா தமிழக முதல்வர் பொறுப் பேற்றல். (6–3–67)
14–8–67
14–4–67

முதலமைச்சர் வானொலிச் சொற்பொழிவு ‘தமிழ்நாடு’ பெயரிட்டுப் பெருமைதரல்
10–1–68 இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார், உள்ளத்துள் எல்லாம் நிற்றல்.
8–9–68 அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமை பெறல்.
4–1–69 கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் பொழிந்த
கடைசிச் சிறப்புப் பொழிவு.
2–2–69 தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல்