00 8 மதுரைக்கோவை. கும்படி - கலங்குதலையுற்ற நின்னைத் தெளியப்பண்ணும்பொருட்டு, அடி மா நிலன் தோய்ந்தன - இவளது சீறடிகள் பெரிய பூமியிற்றோய்கின்றன. அளிகும்பலும் தேன் நசையான்குழல் வீழ்ந்தன - வண்டுக்கூட்டமு மது விருப்பினானே கூந்தலில் விழுகின்றன. அணங்கு அலள் - இவற்றனிவ ளணங்கலலள் (மக்களுள்ளாளே யென்றபடி)எ - து. எனவே, கண்ணிமைத்தனவுங் கண்ணிவாடினவுங் கொள்க.கும் பமென்பதற்குக் குடமென்பாருமுளர். நிற்றெளிக்கு மென்பழி இயல் பின்விகாரம். தெளிவிக்கு மெனற்பாலது தெளிக்குமென விவ்விகுதி தொக்கு நின்றது. தோய்ந்தன, வீழ்ந்தன வென்புழி, விரைவுபற்றி நிகழ் காலத்தை யிறந்தகாலமாக் கூறினானென்க. அளிக்கும், பலுமென்னுமும் மைசிறப்பு. நெஞ்சு அண்மைவிளி. ஏகாரம் ஈற்றசை. கானிலன்றோய்வதும், அளிக்கும்பல் குழல்வாய் வீழ்வதுந்தன் னெஞ்சைத் தெளிவிக்கும்பொருட்டே யெனத்தலைமகன் விதந்து கூறின மைகாண்க. நான்காவது. குறிப்பறிதல். என்பது, என்னை "அரிவை நாட்டமகத்து நிகழ்வேட்கை - தெரி யவுணர்த்துங் குரிசிற்கென்ப" என்றாராகலின், தலைமகன் றலைமகளது வேட்கையை அவட் பார்வையான் தன்னிடத்துண்டென்று குறிப்பறியா நிற்றல். இதற்குச்செய்யுள் : - பூக்கும்பொழில்புடைசூழ் சென்னை நாடன் புகழ்விரவத் தேக்குந் தருமதுரையாமதுரை தன்றிண்சிலம்பிற் றாக்குங்கவின் மூலையானடைமம்மர் தனியகற்ற நோக்கும்பனிமொழிநோக்கன்றமிழ்தினுநூங்கிதுவே. (இ-ரை.) (நெஞ்சே!) பூக்கும் பொழில் புடைசூழ் சென்னை ந டன் - என்றும் பூக்கா நிற்கும் பொழில்கள் பக்கஞ்சூழ்ந்த சென்னபட்ட ணமென்னு நாட்டையுடையவனும், புகழ் விரவ - தன் கீர்த்தியாண்டுங் கலப்ப, தேக்கும் தருமதுரை ஆம் மதுரைதன் - நிறைக்காநிற்குந் தருமது ரையுமாகிய மதுரைப்பிள்ளையினது, திண் சிலம்பில் - திண்ணிய மலையிட த்து, தாக்கும் கவின்முலையான் அடை மம்மர் - நம்மகத்தே தாக்காநிற்கு மழகிய முலைகளான் யாமடைந்த மயக்கத்தை, தனி அகற்ற - ஒப்பற்று நீக்க, நோக்கும்பனிமொழி நோக்கு - இன்று நம்மை நோக்காநிற்கு மிந்தக் குளிர்ந்த மொழியுடையாளது பார்வையானது, அமிழ்தினும் நூங்கிது- அமுதத்தினும் பெருமையாயிருத்தலை யுடையது எ
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/9
Appearance