உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ.வி.பி. ஆசைத்தம்பி கந்தக் கடவுள் குறத்தி வள்ளியை கல்யாணம் செய்தார் என்ற கதை எல்லோருக்கும் தெரியத்தான் செய்யும். அதற் காக பிராமணப் பெண்ணுக்கும் ஆதி திராவிடருக்கும் திருமணம் நடத்திவைக்க சாம்பசிவ ஐயர் சம்மதிப்பாரா? பிராமண ருக்மணிதேவிக்கும் அருண்டேல் துரைக்கும் கலப்புமணம் நடந்த வரலாறு உலகம் அறிந்ததுதான் ஆனால்-ஆதி திராவிட கந்தன் அருண்டேல் துரையாக முடியுமா? பிராமண லட்சுமியை மகாத்மா காந்தி மகன் கலப்பு மணம் செய்ததும் சரித்திர பிரசித்தி பெற்றதுதான். ஆனால் கந்தன் காந்தியார் மகனாக முடியுமா? சாம்பசிவ அய்யர் சம்மதிப்பாரா? சமூகம் சம்மதிக்குமா? இராஜம் இதையெல்லாம் எண்ணிப்பார்த்தாள். பல நாட்கள் - பல வாரங்கள் - பல மாதங்கள் - பகலிரவு விழித் தது. கற்பனையுலகிலே நடமாடி யோசித்து யோசித்துப் பார் த்தாள். தந்தையைக் கேட்கக்கூடாது என்று முடிவுக்கு வந் தாள், ராஜம் தந்தையைக் கேட்கவே இல்லை. ஆனால்.... சாம்பசிவ ஐயரும் ராஜத்தைக் கேட்கவேயில்லை. வரன் தேட ஆள்மேல் ஆள் அனுப்பினார். இதை அறிந்த ராஜம் திடுக்கிட்டாள் என்றாலும், திட்டமும் தீட்டினாள். ராஜத்திற்கு நீ நான் என்று வரன்கள் குவிந்துகொண் டிருந்தனர். உனக்கு எந்த மாப்பிள்ளை யம்மா பிடிக்கிறது. என்று ராஜத்தை சாம்பசிவ அய்யர் கேட்க நினைத்தார். ஆனால் அன்றுதான் ஜாதிபெரியவர்கள் சாம்பசிவ ஐய பதறிக்கொண்டு ஓடி வந்தனர். பத்திரிகைகளைக் ரிடம் - காட்டினர். 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/12&oldid=1735749" இலிருந்து மீள்விக்கப்பட்டது