உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்கவில்லை ! எந்த வரனும் ராஜத்தை கேட்டு வரவே இல்லை. பணக்கார வீட்டுப் பெண்ணைக் கேட்டால், கொடுப்பார் களோ. இல்லையோ, கேட்டுக் கொடுக்காவிட்டால் அவமா னமாச்சே, என்றெல்லாம் எண்ணி எல்லோரும் மௌன மாக இருந்தனர். 416........ ராஜத்தின் மனம் சும்மா இருக்கவில்லை. காதல் புகுந் துகொண்டு களிநடனம் ஆடியது. காதலை யார்தான் என்ன தான் கேட்கமுடியும்? யாரையும் கேட்டுக்கொண்டா இதய வீட்டில் இடம் பெறுகிறது? கல்லினுள் இருக்கும் தேரைக்கும் தெரியாமலே அந்த உள்ளத்திலே நுழையும் சக்தி காதலுக்குண்டு. ராஜம் உள் ளத்திலே காதல் புகுந்ததிலே அதிசயம் என்ன? சூரியனே. நீ உதயமாகக்கூடாது என்று உலகமே கேட்டுக்கொண்டா லும் அவன் கேட்பானா? காதலும் அப்படிப்பட்டது தானே? ராஜம் தன் காதலை வெளியிடவே இல்லை. வெளியிட் டால் காதல் நிறைவேறாது என்று அவளுக்கு நன்கு தெரி யும். இஷ்டப்படி நடக்கும் தந்தை. இந்தக் காதலை ஒருபோதும் ஏற்கமாட்டார் என்று நிச்சயமாக முடிவு செய்திருந்தாள். அவள் காதலன் பெயர் கந்தசாமி. பெயர் கந்தசாமி யாக இருப்பதால் தந்தை கடுங் கோபம்கொள்வார் என்று அவள் முடிவு செய்யவில்லை. கந்தசாமி ஓர் ஆதித் திரா விடன். பிராமணப் பெண் ஆதி திராவிடனை மணக்க ராஜத் தின் தந்தை எப்படி சம்மதிக்க முடியும்? 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/11&oldid=1735748" இலிருந்து மீள்விக்கப்பட்டது