உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைச்சாலை ஆரம்பித்து. சிறைச்சாலை எதுவும் செய்ய முடியாது என்ற திடம் எற்பட ஆரம்பித்தது. சிறைச்சாலை-மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாகக் கருதப்பட்டது; சிங்காரச் சோலையாக எண்ணப்பட்டது. நீதியின்படி குற்றவாளியும், நீதியின்படி நிரபராதியும் சட்டப்படி குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு ஒரே சிறை யில் அடைக்கப்பட்டதாகவே. மக்களிடையே இக்கருத்து ஏற்பட ஆரம்பித்தது. சிறைக்குச் செல்லுவது மதிப்பாகவே எண்ணப்பட்டது. சிறைக்குச் சென்றால், ஒரு காலத்தில் சமூகத்தில் 'பெண்' கூடக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் இந்தக் காலத்தில் சிறை சென்றவர்களுக்கு பெண் மட்டுமல்ல. மண் (ஐந்து ஏக்கர் நிலம்) தானமும். பொன் (ரொக்கமான் யம்) தானமும் செய்யப்படுகின்றன. சட்டத்தால் கைது என்று தீர்மானிக்கப்படுகிற ஒரு வன். தியாகியாக மதிக்கப்படுகிறான். சட்டத்தால் குற்றவாளி எனக் கருதப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவன், கோலோச்சும் கொற்றவனாக சிங்கா தனத்தில் அமர்த்தப்படும் நிலை வந்துவிட்டது. இன்று சிறைச்சாலை என்பது அரசியல் வாதிகளுக்கு அந்தஸ்து நிறைந்த மாமியார்வீடு. அரசியீல் வாதிகள். அடிக்கடி மாமியார்வீடு செல்கிறார்கள். திரும்பிவரும் போது 'அனுபவம்' என்ற அழகிய மனைவியோடு வரு கிறார்கள். 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/42&oldid=1735781" இலிருந்து மீள்விக்கப்பட்டது