உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•சிறைச்சாலை கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதைப் போல பல உண்டு. அவைகளை சிறைசென்ற அனுபவத்தை வைத்தே அடுத்து ஆராய்வோம். 4 1948ல் சென்னை அரசாங்கம் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக வைத்திருந்தது. அதை எதிர்த்து ஒழிக்க திராவிடர் கழகம் முடிவு செய்தது. செப்டம்பர் மாதம் 15௨ நாடெங்கும் அடையாள மறி யல் செய்யும்படி, திராவிடர்களுக்கு பெரியார் உத்தரவிட் டிருந்தார். அதன்படி நானும் எனது தோழர்கள் பத்துப் பேர்களும் விருதுநகர் பள்ளியின் முன் மறியல் செய்வதென முடிவு செய்தோம். செப்டம்பர் 15வ காலை தமிழ் பரீட்சை இருந்ததால், மதியம்மறியல் செய்ய முடிவு செய்து, ஊர்வலமாக விருது நகர் கே.வி. சாலா உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். இந்தி ஒழிக, தமிழ் வாழ்க. என்று முழங்கிய மறியலை ஆரம்பித்தோம். வண்ணம் ஆனால் - காங்கிரஸ் தோழர்கள் ஏட்டிக்குப்போட்டி - செய்ய இந்தி வாழ்க, தமிழ் ஒழிக என்று எதிர்க்கூச்சல் போட்டனர், இந்த அறியாமைக்காக வருந்தி, ஆக்க வேலை யில் ஈடுபட்டோம். அடுத்த நகரசபையால் நடத்தப்படும் உயர் நிலைப் பள்ளிக்கு மறியல் படை புறப்பட்டது. காங்கிரஸ்காரர் களும் எங்களோடு போட்டிக் கூப்பாடு போட்ட்வாறு வந் தனர். ஆனால் திடீரென்று பஸ்ஸில்வந்த போலீஸ் ப 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/54&oldid=1735793" இலிருந்து மீள்விக்கப்பட்டது