உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சி மனப்பான்மை


ன்று என் நண்பரின் பத்திரிகை ஆபீஸிற்குப் போயிருந்தேன். அங்கே ஓர் புரட்சிக்காரர் - அசல், 'அப்படமானவர்', கொஞ்சம் கூடக் கலப்புக் கிடையாது - நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மாஜி - ஏதோ ஓர் - சதிக் கைதி.

என் நண்பர் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். "நம் போன்றவர்கள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டியவராக்கும்" என்றார் என் நண்பர். புரட்சிக்காரர் 'ஓய், உமக்கு வெள்ளைக்காரனைச் சுடத் தெரியுமாங்காணும்' என்ற ஒரு பார்வை பார்த்தார்.

சரி, இதுதான் ஸ்ரீமான் புரட்சியா என்று நிர்ணயித்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். புரட்சிக்காரர் அணிய வேண்டிய அசல் விதேசிச் சரக்கு, யாரையும் எடுத்தெறிந்து பேசும் தன்மை... சர்வ லட்சணமும் பொருந்தியிருந்தது. சாட்சாத் புரட்சிக்காரர் தரிசனத்திற்காக என் முன்னோர்கள் வழிபட்டுவந்த கடவுளை நான் கும்பிட்டுக்கொண்டேன்.

பாட்லிவாலா, பண்டார சன்னிதி, கங்காரு, 1939 மாடல் மோட்டார் கார், இரட்டைப் பெண்கள், ஸினிமா ஸ்டார் காந்தாமணி பாய், உயர்திரு தேசபக்தர், இத்யாதி இத்யாதி ரகத்தைப் பார்க்க மனுஷருக்கு சுபாவமாக உள்ள ஆசையை என் விஷயத்தில் திருப்தி செய்துவைத்த அந்த ஸ்ரீமான் இன்குவிலாப் ஜிந்தா பாத்துக்கு என் மனமார்ந்த வந்தனம்.

என் நண்பரும் சிறைசென்ற தேசபக்தர். கார்ல் மார்க்ஸ் பாராயணமும் கொஞ்சம் உண்டு. சுருங்கச் சொல்லுகிறேனே - வெகு தீவிரம்.

குசலப் பிரச்னங்களுடன் பரஸ்பர போலீஸ் காவல், சிறையில் கசையடி, இடைமறிக்கப்பட்ட கடிதங்கள், சமீபத்தில் வெளியான விக்டர் கொலான்ஸின் தீவிரவாத கிரந்தம் - சுங்க அதிகாரிகள் கண்ணில் பிஸ்கோத்து டின் மாதிரி இந்தியாவிற்குள் நுழைந்தது - எல்லாம் சேர்த்து அந்தச் சமயத்தில் ஸ்ரீமான் எழுத்தாளரைச் சென்ற வருஷத்துப் பஞ்சாங்கமாக, அதாவது சமயா சமயங்களில் திருப்பிப் பார்க்க வேண்டிய விஷயமாக ஆக்கியது.


புதுமைப்பித்தன் கதைகள்

449