உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேசுங்கள் உம்மிடம் கடன்பட்டு சொத்தை இழந்தவன் சபிக்கிறான். உம்மை...உம்மை மட்டுமல்ல, நம்மை! காதிலோ விழுகிறது. முதலிலே கடுங்கோபம்தான் பிறந்தது...எனக்கும்...உண்மை பிறகு தெரிந்தது...வெட்கமும் வேதனையும் பிய்த்துத் தின்கிறது இதயத்தை...

அ: (விளங்காமல்) கடனைத் திருப்பி வாங்குவதிலே கண்டிப்பாக இருப்பது பெரிய பாபமாடா அப்பா! அப்படியும் எத்தனையோ பேருக்கு வட்டி தள்ளிக் கொடுத்திருக்கிறானே, தம்பி.

க: உங்களுக்கென்னத் தெரியும். வெளுத்ததுப் பால் உங்களுக்கு...மற்றொரு பயங்கர உண்மையைச் சொல்லட்டுமா. குப்பம் வெள்ளத்திலே முழ்கி அழிந்ததே, மூன்று குழந்தைகள் பிணமாகி மிதந்தனவே, மக்கள் வீடிழந்து தவித்தார்களே, யாரால்...

அ: பைத்யக்காரப் பிள்ளையா இருக்கறியே...அந்த மக்களுக்குக் கஞ்சி வார்க்கப் பணம் கொடுத்ததே உன் அப்பாதானே...

க: கஞ்சி வார்த்தார் கதறிய மக்களுக்கு, கதியற்ற மக்களுக்கு என் அப்பா! எப்படிப்பட்ட கருணை...கோயில் கட்டி அல்லவா கும்பிடவேண்டும்...என்னை நேருக்கு நேர் பார்த்துச் சொல்லச் சொல்லுங்கள். குப்பம் அழிந்ததற்குக் காரணம் யார்? கொலை பாதகத்துக்குக் காரணம் யார்? அழிவுக்குக் காரணம் யார்? கஞ்சி வார்த்த கனவானைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

[சிங்காரவேலர் திகைத்து உட்காருகிறார். அன்னபூரணி ஏதும் விளங்காத நிலையில் இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறார்கள், கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். கண்ணாயிரம் கோப மிகுதியால், சிங்காரவேலர் அருகே சென்று உரத்த குரலில்...]

க: என்ன பதில்? ஏன் வாயை மூடிக்கொண்டீர்...

[ஆவேசம் பிடித்தவர் போலாகி.]

சி: குப்பம் அழிந்தது யாரால் என்றுதானே கேட்கிறாய்...(குரூரமான பார்வையுடன்) என்னால்தானடா! என்னால்தான்! கரும்புத் தோட்டம் அழியக்கூடாது என்பதற்காகத்தான்....கரும்புத் தோட்டம் யாருக்காக? உனக்காக.....நான் வேட்டையாடுகிறேன் நீ விருந்து சாப்பிடுகிறாய்...நான் ஊரைக் கெடுக்கிறேன், என்கிறாயே, ஆமடா! ஆம்! நான் ஊரைக் கெடுக்கிறேன், நீ உல்லாசத்தில் புரள்கிறாய்....நியாயம் பேசுகிறாயா, நியாயம்! எப்போது பேசுகிறாய் உன் நியாயத்தை? வாழ்க்கையைப் பூந்தோட்டமாக்கிக்கொண்டு, வகை வகையான

363