9 துணைக்கண்டத்தின் வரலாற்றில், வரலாற்றில், வெள்ளையர், நுழை வால் படிந்த கரை, 1947-ஆம் ஆண்டில்தான் துடைக் கப்பட்டது. நமது மண்ணிற்கு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் பட்டாளத்தினின்றும், விடுதலை விட்டது என்பது உண்மை தானே. ? கிடைத்து மேலும் அந்த விடுதலையோடு மற்றொரு விடு தலையும் இணைந்து பூத்ததும் கண்கூடு. இஸ்லாமிய இனத்தவர், தாம ஒரு தனி மதத்தவர் ஆதலால், இந்துக்களின் ஆதிக்கத்தில் தமது உரிமை வாழ்வு நசுக்கப்பட்டு விடும் எனக் கருதி, தமக்குத் தனி உரிமைகள் வழங்கும்படி அர சாங்கத்தைக் கேட்கலாயினர். சில பல ஆண்டுகளில், முஸ்லீம் லீக் என்ற தமது அரசியல் கட்சித் துணைகொண்டு அரசியல் மேதை ஜனாப். ஜின்னா அவர்கள் தலைமையில் "இஸ்லாமியராகிய நாங்கள், இந்தத் தரணியைத் தனித்து ஆண்டமரபினர். எனவே, எமது உரிமைகளை (இந்துக்களி டம்) இழக்கச் சம்மதியோம். எம்மை ஆளும் உரிமை எமக்கே!' என்று கூறித் தனியாட்சி, தனி நாடு கேட்க லாயினர். முதலில் வலிவு பெறாத அவ்வியக்கம், மிக விரைவில் இஸ்லாமியரின் ஒருமித்த ஆதரவைப் பெற்று 'பாகிஸ் தான்' தனியாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தலாயிற்று. இந்து-முஸ்லீம் பிளவும், வேற்றுமையும், பகையும் பெருகாமல் குறைய-உத்தமர் காந்தியடிகள் எவ்வளவோ. பாடுபட்டார். என்றாலும், உண்மையும், சூழ்நிலையும் வேறாகவே வளர்ந்தன. அந்நிலையில் அதுகாறும் காணப் பட்ட புகைச்சல், நெருப்பையே வெளிப்படுத்தலாயிற்று. தீமைகள் வளர்ந்தன; கலகம் பெருகிற்று. முதலில், 'பாகிஸ்தான்' பிரிவினையால் விளையக்கூடிய தீமைகளையே எண்ணி, எடுத்துக்கூறி, அவ்வியக்கத்தை ஒடுக்க நினைத்த தேசீயத் தலைவர்கள்; இறுதியில், அதற் குத் தாம் இசையாததால்' ஏறட்டும் ஏற்படும் தீய விளைவுகளை எண்ணிப் பார்த்து, பாகிஸ்தான் தோன்ற இசைவளிக்க முன் வந்தனர். அந்த இன உரிமைக் கிளர்ச்சியை மதித்து பாகிஸ்தானுக்கு இசைவளித்த போதுதான், இந்தியா வின் விடுதலையும் உடனடியாக உறுதி பெறலாயிற்று.
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/10
Appearance