13 விநாயகர் வந்தார், அவற்றோடு தொடர்புடையன பலவும் இங்குக் குடியேறின. தமிழர்களின் வாழ்வில், வடவர்தம் செல்வாக்கைப் பெருக்கத்தக்க கற்பனைகள் பலவும் உண்மையைப் போன்றே இடம்பெறலாயின. எவ்வாறோ பழங்கதைகளெல்லாம், உண்மைக்குப் பொருந்தினும் பொருந்தாவிடினும், வடவரே ஆற்றல் மிக்கோராகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவ்வெண்ணம் தமிழ்மக்களின் கருத்திலே உறைந்து நாளடைவில் நம்பிக் கையாகவே நிலைக்கலாயிற்று. என்றாலும், தமிழ்மக்கள் தனிப்பெருமையுடைய வீரமரபினர் என்பதும் அவர்களது மொழி, கலை, நாகரிகம் யாவும் மிகவும் உயர்ந்தன. என்பதும், பண்டைக்கால முத லாகவே தமிழ்ப்பெருமக்கள் பலராலும் பலவகையானும் நிலைநாட்டப்பட்டுள்ளன. இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே இயற் றப்பட்டிருக்க வேண்டும் என்று அறுதியிட்டு உரைக்கப் படும் "தொல்காப்பியம்" தமிழரின் மொழி, கலை, நாகரிகங் களின் தனிப்பெருமையை விளக்கும் திருவிளக்காகவே அமைந்துள்ளது. வடவர் மொழியும் மொழியும் கலையும் தது என்ற எண்ண இருள் சூழா தபடித் தொல்காப்பியம் ஒளி பரப்பியது. ெ உயர்ந் தமிழ் அறத்தோடு, வடவர் கொள்கையும் மயங்கத் தாடங்கிய பொழுதே, தமிழ் நெறியின் தனிமாண்பை நிலைநிறுத்தும் வகையில், 'திருக்குறள்' நிலவு தோன்றி யுள்ளது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்குக் குறை யாது முற்பட்ட அறமாகிய திருக்குறள், வேதாகம சாஸ்தி ரங்களின் சார்பில், ஆரிய தர்மங்கள் என்ற பெயரில் புகுந்த பல அநீதிகளை, (அவற்றைக் (அவற்றைக் குறிக்காமலே) வீழ்த்தி தமிழ் அறநெறியினை நிறுவி, தமிழர் வாழ்வுக்கு அரண் செய்தது என்பது மிகையாகாது. திருக்குறளே இன்றும், தமிழுக்கும் தமிழர்க்கும் உரிய அரணாக தமிழ் வீரர்க்குக் கிடைத்துள்ள கேடயமாக அமைந்துள்ளது தெளிவு. சஙக காலத்திற்குப் பின்போ, தென்னாடு கைக் கொண்டிருந்த சிவ(லிங்க) வழிபாட்டினை அடிப்படை
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/14
Appearance