உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புடன் குறிப்பிடும்படியாகப் பணியாற்றி வருபவர்களே தோழர்கள், கலைஞர். மு. கருணாநிதி, தளபதி. ஈ. வி. கே. சம்பத். விருதை வீரர். ஏ. வி. பி. ஆசைத்தம்பி, நடிப்புப் புலவர். கே. ஆர். இராமசாமி, நடிகமணி. டி. வி. நாரா யணசாமி, பூ. கணேசன் எம். ஏ., இளஞ்செழியன் (போர் வாள்) அரங்கண்ணல், புலவர். ஏ.கே.வேலன், திருமதி சத்தியவாணிமுத்து முதலியோர் ஆவர். திராவிட மாணவர் கழகமும் அக்காலத்திலேயே ஆக்கம்பெற்று வளரலாயிற்று. அந்நிலையில் 1947 ஆகஸ்டில், இந்தியா வெள்ளையரிட மிருந்து விடுதலை பெற்றபோது, திராவிடக் கழகத்தில் கருத்து வேறுபாடும் விளைந்தது. அந்த நாளைத் துக்க நாளாகக் கொள்ள முனைந்தார் பெரியார். அது, வரலாற்று நிகழ்ச்சியை மறுப்பதும், பொது உணர்ச்சியை அவமதிப் பதும் ஆவதால், அப்போக்கு வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார் அண்ணா. பெரியார் இசைய மறுத்ததால், அந்நாள் விடுதலை நாளே' தமது கருத்தைச் சான்று காட்டி வெளியிட்டார் அண்ணா. கழகம் மாநுபாட் டுக்கு இடமாயிற்று. இளைஞர்கள், அண்ணாவின் கருத் தையே ஆதரித்தனர். கருத்து மாறுபாட்டையும் தாங்கி நிற்கும் ஆற்றல் பெற்றது திராவிடக் கழகம். மேலும், 'துக்கநாள்' என்று மட்டுமே பேசப்பட்டிருந்தால் ஏற்பட் டிருக்கக் கூடிய பெரிய நெருக்கடியும், அண்ணா வித்த கருத்து வேற்றுமையால் தவிர்க்கப்பட்டது. செய்யப்பட்டார். என்ற விளை அடுத்தாற்போல், அண்ணாமலை நகரில், திராவிடக் கழக மாணவர்களைத் தேசீய மாணவர்கள் தாக்கினர். கலகம் நடந்தது. வழக்கும் தொடரப்பட்டது. 47- நவம் பரில்தான்-உடையார்பாளையம் வேலாயுதம் படுகொலை கழகத்தினர் இன்னல் பலவற்றைத் தாங்கிக் கொண்டனர். உத்தமர் காந்தி அடிகள் 30-1-48ல் கோட்சே என்ற மராட்டியப் பார்ப்பனனால் கொலை செய்யப் பட்டார். செய்தியறிந்து துடித்தது திராவிடம். என்றா லும்-வகுப்புக் கலவரத்திற்கோ, கொடுமைக்கோ இடமேற் படாமல் பொறுமை கொள்ளச் செய்தது திராவிடக்கழகம். அதற்குப் பரிசளிப்பது போல், 'ஆளவந்தார்' - 2-3-48-ல்