உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கருஞ்சட்டைப் படைக்குத் தடை விதித்தனர். படையாக இல்லாத அமைப்பைத் தடை செய்தால், தடையா வெற்றி பெறும்? எனவே தடை தளர்ந்தது. கருஞ்சட்டை மாநாடே நிகழ்ந்தது. அதுகாறும் கழகத்தில் இருந்த தாகக் கருதப்பட்ட வேற்றுமையும், மறைந்தது. இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறாத அரசாங்கம், தடைச் சட்டங்களை வீசத் தொடங்கிற்று. இராவண காவியம் பறிமுதல், போர்வாள், இரண்யன் நாடகங் களுக்குத் தடை, கூட்டங்களுக்குத் தடை என்று கணை கள் பாய்ந்தன. கழகம் கணை பாய்ந்த வேழமாயிற்று. இந்நிலையில், ஆளவந்தார் இந்தியைக் கட்டாய பாட மாகப் புகுத்தத் தீர்மானித்தனர். அதைக் கண்டிக்க இந்தி எதிர்ப்பாளர் மாநாடு நடைபெற்றது. மறைமலை அடிகள், திரு. வி.க. பெரியார், அண்ணா முதலியோர் போர் முழக்கம் செய்தனர். அடுத்து மாணவர் மாநாடும் இந்தி எதிர்ப்பை முழங்கிற்று. அரசாங்கம் எச்சரிக்கையை உணரவில்லை. கப பின்னரே, அண்ணா தலைமையில் அறப்போர் தொடங் பெற்றது. பலவிதமான அடக்கு முறைகளும் கொடுமைகளும் தாண்டவமாடின. இடையில், கவர்னர் ஜெனாலாக அமர்ந்த ஆச்சாரியார் பவனி வரலானார். திராவிடக் கழகம் கருப்புக்கொடி காட்டத் தீர்மானித்தது. முதல் நாளே பெரியார் அண்ணா முதலிய 100பேர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். என்றாலும் கருப்புக் கொடி காட்சியளிக்கத் தவறவில்லை. சில நாட் களிலேயே தலைவர்கள் விடு தலையாயினர். அடுத்து, கவர்னருக்குக் கருப்புக் கொடி வரவேற்பு நிகழ்ந்தது. அறப்போர் வளர்ந்தது. 144. தடைகள் மீறப் பட்டன. குடந்தையில் பெரியார் கை தானார். மற்றும் பலரும் சிறைப்பட்டனர். அங்கு நிகழ்ந்த அறப்போரில், வீர இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். குடந்தை தெருக்களில் திராவிடக் குருதி தேங்கிற்று. போலீசு கட்டவிழ்த்து விடப்பட்டது. திராவிடம் வீறிட்டெழுந்தது.