மொழி வாரிப் பிரிவினை 15 மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்போர் ஏதோ ஒரு பெரிய 'விடுதலை'யை விரும்புவதுபோலப், பேசுகின்றனர்,எழுதுகின்றனர், முழக்கமிடுகின்றனர் | அதற்குச் சிறிதும் குறையாத அளவில் காங்கிரஸ் மேலிடமும் 'ஏதோ ஒரு மகத்தான, மாபெரும் 'சலுகை'யை மக்களுக்கு, அளிப்பதாகக் காட்டிக்கொள் கிறது. மொழிவாரி மாகாணப் பிரிவினை என்பதில் 'பிரிவினை' என்ற வார்த்தை இருக்கிறதே ஒழிய, இதனால், ஏற்படும் நலன் யாருக்கு, என்பது கூர்ந்து நோக்கின், விளங்குவதாகும். இன்று இந்தியா முழுமையையும் டெல்லியிலிருக் கும் மத்திய சர்க்கார் ஆண்டு வருகிறது. மத்திய சர்க்காருக்குக் கட்டுப்பட்டவையாக மாகா ணங்கள் இருக்கின்றன. மாகாணங்கள், ஆங்கில ஆதி பத்யத்தின் அமைப்புகள்! வெள்ளையர் எடுத்தடி வைத்த காலத்தில் "இந்தியா " ஒரே தேசம் இல்லையென்பதும், அதில் சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம், ஐக்கிய மாகாணம் என்பதுபோல மாகாணங்கள் இல்லையென் பதும், யாவரும் அறிந்த விஷயம். ஆங்கில ஆதிபத்தியம் வளர்ந்து ஆட்சிச் சூத்திரம் அவர்கள் கைக்கு வந்தபின், நிர்வாக நலனை அனுசரித்து, மாகாணங்கள் உண்டாக்கப் பட்டன. வெள்ளையன், வெளியேறிப்போய்விட்டான், தான் வந்தபொழுது, சிதைந்து சிக்கல்கள் நிறைந்து, குட்டி
பக்கம்:இதயகீதம்.pdf/22
Appearance