இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மொழிவாரிப் பிரிவினை "திராவிடஸ்தான், மொழிவாரி மாகாணக் கோரிக் கை போன்றது என்றால், அதனை நான் ஏற்கிறேன். ஆனால், பாகிஸ்தானைப் போலத்தனி யாட்சி தன்னிச்சை கொண்டதாக ஆவதை நான் விரும்புவதற்கில்லை என்று, காங்கிரஸ் தலைவர் பட்டாபி, வெளியிட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் மாணவத் தோழர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது ! மொழிவாரி மாகாணக் கோரிக்கை போன்றது. என்றால் தனக்கும் சம்மதம் தான் என்கிறார், ஆனால் தன்னிச்சை நாடாக, சுதந்திர நாடாக ஆவதைத் தான் ஏற்பதற்கில்லை என்கிறார். இன்று எங்கும் மொழிவாரி மாகாணப் பிரிவினை பற்றி உரத்துப் பேசப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் களும், மொழிவாரி மாகாணப் பிரிவினை அவசியமே, என்ற முடிவுக்கு வந்து, எப்போது பிரிப்பது, எப்படிப் பிரிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.