புலிநிகர் மாந்தர் களைத் தரை மட்டமாக்க வேண்டும் என்ற வெறி இன்று இலட்சிய உருவாகிவிட்டது. 18 தாய்மொழிப்பற்றும், தாய் நாட்டுப்பற்றும் தென் னாட்டு இளைஞர்களின் இன்றைய இதயத்துடிப்புகள். அவர்கள் இளைஞர்கள், நாட்டின் நரம்புகள். எண்ணமெல்லாம் புது ஆசையில் பதிந்துவிட்டது. புது வாழ்வு காணப் புறப்பட்டுவிட்டனர். களைப்பும் கவலை யும் தங்களைத் தாக்கினாலும் புன் சிரிப்புடன் அவைகளைத் தள்ளிவிட்டு, புது யுகம், காணப் புறப்பட்டுவிட்டனர். ( வீழ்ந்துபோன சமுதாயத்திலே விடிவெள்ளி உதய மாகிவிட்டது. 'அரும்பு மீசைகள்' எல்லாம் ஆர்வத்தின் சின்னங்களாகிவிட்டனர். இன்னொருவனின் உல்லாச சோலையாகிவிட்ட நாட்டை மீட்டு, நல்வாழ்வு காணும் முரசொலி, இன்று முழங்காத இடமில்லை. மாபெரும் பணியில், இறங்கவிட்டது மறத்தமிழ் பட்டாளம். மொழியையும் வாழ்வையும், உயர்த்தப் புறப்பட்ட, அப்புலி நிகர் வீரர்கள், புது ஏகாதி பத்யம் ஒன்றையும் எதிர் கோக்கவேண்டியவர்களாகியிருக் கிறார்கள். அப்புது-ஏகாதி பத்தியம் இவர்கள் வாழ். வை, மீளா அடிமைக் குழியில் வீழத்தும் அளவில் கோரவாயோடு கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. R
பக்கம்:இதயகீதம்.pdf/20
Appearance