16 இதய கீதம் ராஜாக்களும், குறுநில மன்னர்களும் நிறைந்து கிடந்த ஒரு பரந்த நிலப்பரப்பை, ஒரே 'தேசம்' ஆக அமைத் துக் கொடுத்துவிட்டு. சுயராஜ்யம் வேண்டும், அந்நியர் விரட்டப்படவேண் டும் என்ற உரிமைக் கிளர்ச்சியை எழுப்பி 'இந்தியன் என்ற வார்த்தையைக் கொண்டு, யாவரையும் ஒன்று சேர்த்து போராடியது காங்கிரஸ் கட்சி. உரிமை வேட் கையின் காரணமாக எழுந்து வளர்ந்த காங்கிரஸ் கட்சி யின் தலைவர்கள், முன்னோடும் பிள்ளைகள், வடநாட்டவர் களாயிருந்தனர். அவர்களுடன், அந்நிய ஆதிபத்தியத் தை விரட்டும் வேகத்துடன், ஆசையுடன் யாவரும் ஒன்று திரண்டனர். பலம் காங்கிரசுக்கு வளர்ந்தது. அதோடு அதன் வட இந்தியத் தலைவர்களின் செல்வாக் கும் வளர்க்கப்பட்டது — அவர்கள் சொன்னதைக் கேட் கும் 'கிளி 'களாகயிருந்தவர்களால்! எனவே, அங்கியர் வெளியேறியதும், ஆட்சிப் பீடமும், வட நாட்டார் கைக்குப் போயிற்று. ஆட்சிப் பீடம் ஏறி பூரண இந்தியாவுக்கும் தலைவர் களாக வீற்றிருக்கின்றனர் வடநாட்டு மக்களைச் சேர்ந் தோர். எல்லாத் துறையிலும், அவர்கள் வாழ்வு, வள முடையதாக இருக்கிறது. தென்னாட்டைச் சேர்ந்தோ ருக்கும், பதவிகளில் சில 'துண்டு'களும், ஆசைகளும் காட்டி. 'எல்லோரும் ஒரே நாட்டவராக' வாழ்வதாகக் காட்டிவருகின்றனர்.
பக்கம்:இதயகீதம்.pdf/23
Appearance