மொழி வாரிப் பிரிவினை 17 இன்று இந்தியாவை ஆளும் மத்திய சர்க்கார் மாகாணங்களைப் பிரிப்பதில், மொழிவாரியாக அமைப் பதில் நாட்டம் கொண்டிருக்கிறது, பெயர், 'பிரிவினை' என்று இருக்கிறதே ஒழிய, பிரிக்கப்படும் மொழிவாரி, மாகாணங்கள் மத்திய சர்க்காருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இன்னும் கூறவேண்டுமானால், இப்போ துள்ள நிர்வாகத் தொல்லை, மாகாணங்கள் பிரிக்கப்பட்டு விட்டால், மத்திய சர்க்காருக்குப் பெரிய அளவில் குறைந்துவிடும். பெரிய மாகாணங்களைக் கண்காணிப் பதில் இருக்கும் கஷ்டம், மத்திய சர்க்காருக்குக் குறைந்து விடும். ஒரு ஜில்லா முழுமைக்கும் ஒரே கலெக்டர் இருந்து ஆளுவதற்குப் பதில், அந்த ஜில்லாவை பல தாலுக்காக் களாகப் பிரித்து, அந்தந்தத் தாலுகாவையும் ஒரு தாசில் தார் பொறுப்பில் விட்டு, தாசில்தார்கள் வேலையைச் சரிவரச் செய்கிறார்களா, என்று கலெக்டர் மேற்பார்வை யில் வைத்தால், கலெக்டருக்கு முன்னிருந்த நிர்வாகக் கஷ்டம், முன்பைவிடக் குறைந்து விடுகிறதல்லவா ! அதுபோலத்தான் இந்த மொழிவாரி மாகாணப் பிரிவினை என்பதும். இதனால், மத்திய சர்க்காருக்கு நன்மை தானே ஒழிய, சங்கடம் எதுவும் கிடையாது. சென்னை போன்ற பெரிய மாகாணத்தை, தன் பார்வையில் வைத் துக்கொண்டு, பொறுப்பு அதிகமாக இருக்கவே, அதை மூன்று அல்லது நான்கு மாகாணங்களாகப் பிரித்து, அவைகளைத் தனித்தனியான நிர்வாகத்தில் விட்டால், சங்கடம் குறையுமல்லவா ! பெரிய இடத்தை, கைக்குள்
பக்கம்:இதயகீதம்.pdf/24
Appearance