உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இதய கீதம் வைத்திருப்பதிலேற்படும் சங்கடம், சிறிய சிறிய இடங் களை நிர்வகிப்பதில் ஏற்படாதல்லவா! இந்த 'தந்திரமான ஏற்பாடுதான்' மொழிவாரி மாகாணப் பிரிவினை என்று பேசப்படுவதும், மத்திய சர்க்காரே இதில் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதும் ! இப்படி மொழிவாரியாகப் பிரிக்கப்படுவதால், திராவிட முன்னேற்றக் கழகத்தாராகிய நாம், கூறிவரும் இலட்சியங்கள் ஈடேறிவிட முடியாது. முன்பு "தமிழ் நாடு தமிழருக்கே" என்று நாம் முரசொலித்தோமே, அந்த முழக்கத்திற்கும், இப்போது கூறப்படும் தமிழ் நாடு பிரிவினைக்கும், மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தி யாசம் உண்டு. "திராவிட நாடு" கோரும் நம்முடைய இருதய கீதமே வடநாட்டு ஆதிபத்தியத்திலிருந்து விலகி, சுரண்டு தலுக்காளாகி நிற்கும் ஒரு சமுதாயம் தனக்கென ஒரு தனியாட்சி அமைத்து வாழவேண்டும் என்பது தான். இதற்கான காரணங்களை, எண்ணமுடியாத அளவில் நாம் இதுவரை கூறிவந்துள்ளோம். பக்கத்திலே உள்ள பர்மா, தெற்கே கிடக்கும் சிறு தீவு இலங்கை போன்றவை யெல்லாம் தனியரசு நிறுவி, தாங்களாகவே ஆட்சி நடத்தும்பொழுது எல்லாத் துறை களிலும் வசதியும் வளமும் நிரம்பிய பழந்தமிழ்ச் சமுதாயம், தனக்கென ஒரு நாடமைத்து, தன் வாழ்க் கையை ஏன் நடத்த இயலாது என்ற உரிமை ஒலியே நம் பிரிவினை முழக்கமாகும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/25&oldid=1740322" இலிருந்து மீள்விக்கப்பட்டது