உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இதய கீதம் நமது கண்டனத்தை, அதிருப்தியை, ஆத்திரத்தைத் தெரிவிக்க, திரட்டிக்காட்ட நாமும் தவறி விட்டோம்! ரயில் போய்விட்டது! தவறினோம், அதோ வேக மாக நம்மைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது! ஏன், எப்படி எக்காரணத்தால் என்பது அல்ல பிரச்னை. காரணம், விளக்கப் புகுந்தால் வேதனையும் சோகமுமே வெளிவரும், தக்க பதில் கிடைக்கா து கூற முடியாது என்பதால். ரயில் போய்விட்டது ; இந்திய உபகண்டத்தின் அரசியலமைப்பு தயார் செய்யப்பட்டு நம்மை ஆளத் துவங்கிவிட்டது. இடியும் மின்னலும், நம்மை எதிர் நோக்கிவிட்டன; இன்னலும், துன்பமும் நம்மை நெருங் கிப் பிடித்துக்கொண்டு விட்டன. காங்கிரஸ் ஆட்சி தயாரித்த, சுயநல சுகபோகச் சட்ட திட்டங்கள் நம்மீது திணிக்கப்பட்டு விட்டன. நாம் அடிமைப் படுத்தப்பட்டு விட்டோம், நமது கால்களிலே விலங்கு, கைகளிலே கட்டுகள், வாழ்க்கைச் சுதந்திரத்திலே சூறாவளி ஆரம்பமாகிவிட்டது! இந்திய துணைகண்டம்-குடியரசு நாடெனப் பிரகடனப் படுத்தப்பட்டு விட்டது. ஜனவரி 26-வீழா, வேடிக்கை, விருந்து, பேச்சு ஆகியவைகளுடன் இந்திய வரலாற்றில் ஒரு இடம் பெற்றுவிட்டது. அந்நாள், காங்கிரஸ் ஆட்சியாளரின் இன்பநாள் ; முதலாளித்துவத் தின் 'முத்திரை' மக்கள் வாழ்வில் பொறிக்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/33&oldid=1740330" இலிருந்து மீள்விக்கப்பட்டது