28 இருநூறு இதய கீதம் ஆண்டுகள், இந்நாட்டைச் சுரண்டி வாழ்ந்த ஆங்கிலேய ஆதிபத்தியம்,வெளியேறிய இரண் டரை ஆண்டுகளில் தன் ஆட்சி ஆதிக்கம், கரண்டல் வேலை நீடிக்க வழி வகை செய்துகொண்டு விட்டது. வடநாட்டு ஆதிபத்தியம் எல்லோரையும் கட்டுப்படுத் தும் அரசியலமைப்பை ஆளத் துவங்கிவிட்டது. வகுத்துக்கொண்டு நம்மை வேதனை ! வேதனை !! வேதனை !!! நம்மை இடிக் கிறது. கலங்க வைக்கிறது. ஆனால் இத்தனையும் நாம் எதிர்பாராதது அல்ல; எதிர்பார்த்தோம், எனினும் ஏமாந்தோம்! 1947- ஆகஸ்டு பதினைந்து ஏற்படுமுன் அதாவது இந்தியாவைவிட்டு வெள்ளையர் வெளியேறு முன் நடந்த சம்பவங்கள் பலப்பல. கிரிப்ஸ் தூது-பிரிட்டிஷ் மந்திரி சபைக் குழுவினர் தூது-வேவல் பேச்சு வார்த்தை எல்லாம் நடந்தது, அதன் பின்னரே ‘ஆகஸ்டு 15 வந்தது. வெள்ளையர் இந்நாட்டை விட்டு வெளியேறுவது எப்படி,எம்முறையில், என்பது பற்றிய விவாதங்களுக் குப்பின், ஏற்பட்ட முடிவின் விளைவாகவே "சுதந்திரம்" இந்தியத் துணைக்கண்டத்துக்குக் கிடைத்தது. இந்தியத் துணைக்கண்டத்தை விட்டு, வெளியேற, சுதந்திர முன்ன ணியிலிருந்த காங்கிரஸ்-லீக் கட்சியினருடன் பேசி ஒரு ஏற்பாடு செய்துகொண்டனர். அந்த ஒப்பந்தத்தின் விளைவாகவே, சுதந்திரமும், அதன் காரணமாக அரசியல்
பக்கம்:இதயகீதம்.pdf/35
Appearance