புது அரசியல் 31 அறிவித்திருக்கிறோம். அன்று நடைபெற்ற கொண்டாட் டங்களிலே, நமக்கு மகிழ்ச்சியில்லை, மனவேதனை தான் இருந்தது. நம்மை அடிமைப்படுத்தும் இந்த அரசியலமைப்பை நாம் கண்டிக்கிறோம், இந்த அரசியலமைப்பு மாற்றப் பட்டால்தான் நம் மனக்குறை தீரும்-அவசியம் மாற்றப் பட்டுத்தான் ஆகவேண்டும், அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடத் தயக்கமோ, தவக்கமோகொள்வதற்கில்லை. அதேவேளையில், நமது எண்ணத்தைச் சாதிக்க, நமது இலட்சியத்தை அடைய, சட்டவிரோதம் என்கிற பாதையிலே நடக்க நாம் விரும்பவில்லை. பலாத்காரம், சதி, சூதுமதி இவை நமக்கு பிடிக்காத செயல்கள். குழப்பத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்தி நாட்டின் நல்வாழ்வைச் சீர்குலைத்து, இலட்சியத்தை அடையமுனை வதால் நாட்டு வாழ்வு சீர்குலையுமே தவிர, நமது எண் ணம் விரைவில் வெற்றிபெற வழியேற்படாது. எனவே, நமது இலட்சியத்தைக் காண, சுதந்திரத் தைப்பெற நாம் நடத்தும் போராட்டம்=அறப்போர்- நேர்மையையும்,சட்ட வரம்பைத் தாண்டாமல், நேர்மை யுடன் இருக்கும். நமது கோரிக்கைகளைக் கூறும்போது ஆளவந்தாரின் அடக்குமுறை அதிகமாகலாம் : பயம் இலை நமக்கு அதை ஏற்கச்சித்தமாக இருக்கிறோம்! சீற்றமும், சித்திரவதையும் அதிகரிக்கலாம்; அதனால் அறி ஆபத்துக் குழியில் விழுந்துவிடமாட்டோம்;
பக்கம்:இதயகீதம்.pdf/38
Appearance