உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 15 மாமனார் காட்டிய அறைக்குள் சேகர் நுழைந்தான். அங்கே 'மெத்' என்ற பஞ்சணை ; ஊதுபத்தியின் 'கம கம' என்ற வாடை. சுற்றிலும் பலவகை பட்சணங்கள் பழவர்க்கங்கள் ஆவலாக காத்திருந்தன. பஞ்சணையில் உட்கார்ந்து மேலே பார்த்தான். பரமசிவனும், பார்வதி யும் அணைந்தபடி உள்ள படம் ஒன்று இருந்தது. சபாஷ்! பள்ளி அறைக்கு ஏற்ற படம்'- என்று சேகரின் உள்ளத்தில் முணுமுணுப்பு ஏற்பட்டது. .. அப்போது அறைக்கதவு மீண்டும் திறந்தது. ஒரு கையிலே பாலும், மறுகையில் வெற்றிலை தட்டும் ஏந்திய படி லீலா உள்ளே நுழைந்தாள். இரு தட்டுகளையும் கீழே வைத்துவிட்டு பேசாமல் நின்றாள். இரண்டொரு தடவை பேச நினைத்தான் சேகர். ஆனால்-அவனால் பேச முடியவில்லை. கடைசியில் “ உட்காரேன் என்று சேகர் எப்படியோ சொல்லிவிட்டான். லீலா குனிந்து கொண்டே நின்றாள். "உட்காரமாட்டாயா?" என்று சொல்லிக்கொண்டே சேலையைப் பிடித்தான். லீலா உட்கார்ந்துவிட்டாள். 'உம்! இந்த பழத்தை சாப் பிடேன்'- என்றான் சேகர். “உம்! நீங்கள்... என்று இழுத்தாள் லீலா! . .. முதல் இரவு' பற்றி எண்ணற்ற புத்தகங்களைப் படித்திருக்கிறான் சேகர். அவைகளெல்லாம் மிகைப் படுத்தி எழுதப்பட்டிருக்கும் என்றுகூட எண்ணினான். ஆனால் அனுபவரீதியாக பார்க்கும்போது அத்தனையும் உண்மை என்பதை உணர்ந்தான். உண்மையிலேயே பிறப்பும், முதல் இரவும் வாழ்க்கையிலே மறக்கமுடியாத சிறந்த அம்சம். மனிதன் எத்தனையோ தடவை செத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/16&oldid=1740976" இலிருந்து மீள்விக்கப்பட்டது