28 தந்தையின் ஆணை வருமா? நிச்சயமாக வராது ஏன்? பணவசதி உள்ளவன் எப்போதும் படித்து விடுவான். அதிலும் முற்போக் கடைந்துள்ள பிராமண பணக்காரர்கள் தான் 'தகுதி திறமை என்ற நிறுவையில் படிக்க முடியும். பிற்போக் காக உள்ள திராவிட சமுதாய பணக்காரர்கள் என்னதான் ‘குட்டிகரணம் போட்டாலும் இடம் கிடைக்காது. எனவே வகுப்புவாரி பிரதிநிதித்வம் இருந்தால் திராவிடர் களுக்கு என்று ம் ஒதுக்கப்படும். அதில் திராவிட பணக்காரர்களுக்கு இடம் கிடைக்கும் : போன்ற ஏழை திராவிடனுக்கும் இடம் கிடைக்கும்"- என்று சேகர் ஆவேசமாக பேசினான். என்னைப் அடுத்தபடியாக மிஸ். நளினா அழகான நல்ல உதா ரணத்தோடு பேசினாள். உணவு ரேஷனைப் போன்றதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்.உணவு அதிகம் இல்லா விட்டால் அதை பணக்காரர்கள் வாங்கி பதுக்கி விடுவார்கள். உணவு தட்டு ஏற்பட்டு, அதிக விலை கொடுத்து ஏழைகள் வாங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். பணக்காரர்கள் பதுக்காமல் இருப்பதற்காகவே ரேஷன் சட்டம்! அதைப்போலவே கல்லூரிகள் குறைவாக இருக்கும் நாட்டில் பணக்காரர்களைப்போல் முற்போக்கடைந்த பிராமணர்கள் எண்ணிக்கைக்கு மேல் அதிக இடம் பெற்றுவிடாமல் தடுப்பதற்கு எல்லோருக்கும் சமமான நீதி வழங்குவதற்கு ஏற்பட்ட சட்டந்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்! இதை வகுப்பு துவேஷம் என்றால் ரேஷன் முறை அரிசி துவேஷமாக இருக்கவேண்டும்!"
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/29
Appearance