உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 50 29 இப்படி இருவர் பேச்சும் சென்னை மாகாணம் மட்டு மல்ல. இந்தியா பூராவும் எதிரொலித்தது. சர்க்காரும் உண்மை உணர்ந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள் கைக்கு ஆதரவு காட்டினார்கள். கோபமடைந்த பிராம ணர்கள் மகாத்மா காந்தியிடம் சென்று சென்னை ராஜ்யத்திலே எங்களுக்கு படிக்க பள்ளியில் இடமில்லை - என்று முறையிட்டார்கள். மகாத்மாவும் - 'ஓ ! என் பிராமணர்களே ! பகவானுக்கு அடுத்தபடியாக உள்ள உங்களுக்கு படிப்பு எதற்கு? பஜனை செய்யுங்கள்! அதுவே போதும் 1 -என்று சிரித்துக்கொண்டே கூறி விட்டார். அப்புறம் என்ன செய்வது? அரவத்தைப் போல படத்தை சுருக்கிக்கொண்டார்கள். 10. மிஸ்.நளினா - LDIT GOT கன்லூரிகளிலே ஓரளவு அமைதி நிலவியது. வர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்துவந்தார்கள். வகுப்புரிமை போராட்டத்திற்குப்பின் நளினாவும், சேகரும் ணைபிரியா நண்பர்களாயினர். உல்லாசமாக உலவச் செல்வதில் இருந்து உட்கார்ந்து. படிப்பது வரை இரு வரும் ஒன்றாகவே இருந்தனர். மிஸ். நளினா திருமங்கலத்கைச் சேர்ந்தவள்: பெரிய பணக்காரி' ஆனால், தாய் தந்தையை இழந்து தன்னந் தனியாக உள்ள ஓர் கன்னி. கல்யாணம் செய்துகொள் ளும் வாழ்க்கையை கசப்பாகக் கருதினாள். பிரமச்சாரி யாகவே இருந்துகொண்டு பிறருக்கும் தேசத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணினாள். இன் றைய நாட்டுக்கு டாக்டர்கள் அதிகம் தேவை என்பதை அவள் உணர்ந்தே வைத்தியப் படிப்புக்காக சென்னை . P

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/30&oldid=1740991" இலிருந்து மீள்விக்கப்பட்டது