உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தந்தையின் ஆணை வந்தாள். படிப்பு முடிந்ததும் சொந்தத்தில் ஒரு பெரிய ஆஸ்பத்திரி வைத்து ஏழை எளியவர்களுக்கும் கிராம மக்களுக்கும் பேருதவி செய்யவேண்டும் என்பது அவள் நீண்ட நாள் கனவு சேகரை சிறந்த நண்பனாக நளினா மதித்தாள். , சேகருக்கும் நளினாவிடத்தில் ஓர் தனி மதிப்பு இருந்தது. அதிலும் தன்னுடைய கிராமமான பாலைவன் கிராமத்திற்கும் திருமங்கலத்திற்கும் இருபது மைல் தூரங் தான் என்பதை அறிந்த சேகர், நளினா மிகவும் நெருங்கிய வளாக இருப்பதை அறிந்து ஆனந்தப்பட்டான். ஆனால், நளினாவின் நாகரீக வாழ்வையும் படாடோப போக்கை யும் கண்ட சேகர், அவளிடம் தான் ஒரு பட்டிக்காட்டான் என்றும், பரம ஏழை என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. சொன்னால் தன்னைப்பற்றி கீழ்தரமாக நளினா நினைத்து விடுவாள் என்று கருதிய சேகர், தானும் ஓர் அனாதை என்றும் சொந்த ஊர் விருதுநகர் என்றும் கஷ்டப்பட்டு பொய் சொல்லி விட்டான். பிறந்த இடத் தையும், பெற்ற தாயையும். சிறந்த சகோதரர்களையும் மறந்து மாபெரும் பொய் கூறிய சேகர் தனக்கு விவாகம் ஆகிவிட்டது என்று சொல்வானா? சொல்லத் தான் உள்ளம் இடங்கொடுக்குமா? அதிலும் " தன் மனைவி ஓர் பட்டிக்காடு " என்று சொல்லவே வெட்கப்பட்டான். அனா சேகரும் தன்னைபோன்ற ஓர் அனாதை என்று உணர்ந்த நளினா மிகவும் சந்தோஷப்பட்டாள். தைக்கு அனாதையே துணை! இருவரும் டாக்டராகி ஓர் ஆஸ்பத்திரி வைத்தால்...? இப்படி லட்சிய கனவு கண்டாள் நளினா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/31&oldid=1740993" இலிருந்து மீள்விக்கப்பட்டது