உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 31 சேகர் நளினா நட்பு நாளுக்கு நாள் வளர்ந்தது. இரு வரும் இணைபிரியாதவர்களாயினர். சேகருக்கு வேண்டிய உதவி எல்லாம் நளினா செய்தாள் : இசையில் மிகவும் பயிற்சி பெற்ற நளின. சேகருக்கு சங்கீத ஞானத்தை ஊட்டினாள். பியோனா வாசிக்கவும், பிடில் வாசிக்கவும் சேகருக்கு நளினா கற்றுக்கொடுத்தாள். நாளடைவில் அதிலும் சேகர் கெட்டிக்காரனானான். பிரதி தினமும் ஒரே குஷிதான். சேகர் பிடில் வாசிப்பான்; நளினா பின்பாட்டு பாடுவாள். பியோனா வாசித்தால்...... தோகையை விரித்து மயில்போல் ஆடுவாள். குயில்போல் பாடிக் கொண்டே. அதைக் கண்டு சேகர் சேகர் களிப் படைவான். இப்படியே கவலையின்றி காலம் கடந்து வந்தது. இருவரும் கடைசி வருடமாக டாக்டர் பரீட்சை எழுதினர். 11. பிடில் சேகரும் நளினாவும் பரீட்சையில் தேறி விட்டால்... அன்று தான் அவர்களுக்கு கல்லூரியின் கடைசி நாட்கள் ஆம்! அன்று முதல் விடுமுறை ஏன்? அவர்களுக்கு கல்லூரி வாழ்வில் இருந்து விடுதலை. இனி அவர்கள் வீட்டுக்குப் போகலாம். நளினா தன் சென்னை இருப்பிடத்தைக் காலி செய்ய சாமான்களை எல்லாம் கட்டினாள். சேகரும் துணையாக வேலை செய்தான். அன்று மாலை வரை வேலை சரியாக இருந்தது இருவருக்கும், நளினாவின் சாமான்கன் ஒரு லாரி நிறைய இருந்தது திருமங்கலம் செல்ல ஒரு லாரியே பேசி முடிக்கப்பட்டு சாமான் அனுப்பப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/32&oldid=1740994" இலிருந்து மீள்விக்கப்பட்டது