32 தந்தையின் ஆணை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரவு எட்டு மணிக்கு தான் சென்னையை வீட்டு கிளம்புகிறது. இருவரும் நினைத்திருந்தால்... அன்றே புறப்பட்டிருக்கலாம். நளினா தான் நாளை போகலாம் என்று சொல்லி விட்டாள். மறுத்துப் பேச சேகருக்கு ஏனோ மனமில்லை. அன்று இரவு "இருளுக்குப் பின் - என்ற நாடகம் பார்க்கச் சென்றார்கள். காஸ்மா பாலிட்டன் கிளப் அமைச்சூர் நடிகர்களால் நடிக்கப்பட்ட அந்த நாடகம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அதற்குக் காரணம் அந்த நாடகம் இருவர் வாழ்க்கையையும் இலேசாக பிரதிபலித்துக் காண்பித்தது. இருளுக்குப் பின் நிச்சயம் ஒளி உண்டு என்ற நம்பிக்கை யுடன் இரவு ஒரு மணிக்கு தியேட்டரை விட்டு வெளி யேறினர். டேக்சி ஒன்று வைத்து நேராக இருப்பிடத் திற்கு வந்தனர். அன்று இருவருக்கும் ஏனோ தூக்கம் வரவில்லை. கொஞ்ச நேரம் இருவரிடையும் நாடக விமர்சனம் அரட்டை! இப்படியே மணி மூன்று அடித்தது. தூக்கம் இருவரையும் பலமாக முற்றுகை இட்டது. தோற்று விட்டார்கள். தூங்கினார்கள் தூங்கினார்கள் காலை ஒன்பது மணி வரை ! பின்னர் எழுந்து காலை காப்பியை முடித்து விட்டு இருவரும் பஜாருக்குப் புறப் பட்டார்கன். நளினா ஒரு அழகான பிடில் ஒன்று வாங்கினாள். இன்னும் பல சாமான் வாங்கி முடித்து விட்டு இருவரும் வந்தனர். .டி "சேகர்! விருதுநகரில் உள்ள விலாசம் என்ன ? அனாதைக்கு விலாசமாவ து கைலாசமாவது! போனதும் எழுதுகிறேன், நளினா !
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/33
Appearance