உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தந்தையின் ஆணை ஆனால் முதல் முத்தம்' இருக்கிறதே அது என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை." நான் தான் உன்னை இப்படி தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீ ?...என்னை நினைப்பதே இல்லை. நான் சென்னையிலே இருந்தபோது போது .. நீ ஏன் தினமும் லெட்டர் எழுதவில்லை? என் மீது உண்மை யான அன்பு இருந்தால்.... . என்னை இப்படி ஏங்க விடுவாயா? "அன்பே! நான் உங்கள் மனைவி தான்! இருந் தாலும் பெண்! உங்களைப்போல் அடிக்கடி லெட்டர் எழுத முடியுமா? அல்லது உங்களைப்போல எனக்கு எழுதத் தெரியுமா? நான் அப்படி எழுதினாலும் அத்தை யும் மற்றவர்களும் என்ன நினைப்பார்கள் ?.... கடிதம் எழுதினால் தானா காதல்? கடிதமில்லாத காலத்திலே வாழ்ந்த காதலர்கள் எல்லாம் எப்படி வாழ்ந்தார்கள்? ' சுகுமாரா ! முதல் முத்தமும் - ஏழாவது முத்தமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆம்!... அன்றைக்கு வீட்டிலே நான் தனியாக இருந்தேன். என் தந்தை அன்று எங்கோ போய்விட்டார். உங்கள் வரவுக்காக நான் காத்திருந்தேன்; வந்தீர்கள்; அப்போது.. நீங்கள் தந்த அந்த ஏழாவது முத்தம் இந்த உலகத்தையே மறக்க வைத்துவிட்டது. விட்டது. எங்கிருந்தோ வந்த மேகம் சந்திரனை மறைத்து சேகர் மனதில் தோன்றிய இன்ப கற்பனை யையும் துன்பம் மறைத்தது. " சே ! லீலாவை பற்றியா எவ்வளவு கற்பனை? இப்படி அடுத்து வேதனை தோன்றியது. மேகத்தில் இருந்து சந்திரன் விடுபட்டான். சேகர் தன் ·பாட்டை ஆரம்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/47&oldid=1741009" இலிருந்து மீள்விக்கப்பட்டது