உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 45 மச்சாரியாக இருப்பதா? அடக்கமும் வெட்கமும் பெண் களுக்கு அவசியமாம்! கணவனிடத்திலே அவை இருக்க வேண்டுமா? இருக்கட்டுமே - அதற்கும் ஒரு அளவு வேண்டாமா? இவை சேகர் உள்ளத்தின் எதிரொலி ! சூரியன் இருக்கிறானே அவன் அன்னியன்! அவனை பார்க்கும்போது கூச்சம் இருக்க வேண்டியது தான். ஆனால் -- சந்திரனைப் பார்க்க கூச்சப்படுவதா? மலர் முகத்தைக் காட்டவேண்டிய லீலா ஏன் 'தொட்டால் சுருங்கியாக' காட்சி அளிக்கிறாள்? உம்! சுத்தப் பட்டிக் காடு. 1 அந்த எதிரொலி அளித்த பதில்.

<B லீலா !... என் காதல் கனியே! DE 'அன்பரே ! ... சென்னையில் இருக்கும்போது..." உன்னைத்தான் தினமும் நினைப்பேன், நீ ஆறு மாதத்திற்கு ஒரு தடவை எழுதுகிறாயே கடிதம்- அதை எடுத்து திருப்பித் திருப்பி படிப்பேன்...... முதல் முதலாக உன்னை முத்தமிட்டேன் பார் ! அந்தக்காட்சியை என் கண் முன்னால் நிறுத்தி அதைப் பார்த்துப் பார்த்து பூரித்துக்கொண்டே இருப்பேன். அதை நினைக்கும் போது. எவ்வளவு இன்பம் தெரியுமா? நான் இருக்கும் டத்திற்கு நீ உள்ளே வந்தாய் வெட்கப்பட்டுக்கொண்டு தான் நின்றாய். ஆனால் அடுத்த வினாடி ? நம் இருவரின் உதடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்த காட்சிதான் எனக்கு நினைவிருக்கிறதே தவிர, நாம் ஆனந்த அணைப்பில் இருந்தது நினைவுக்கு வரவில்லை. சுகுமாரி! முதல் இரவு உனக்கு மறந்திருக்கும் 1 எனக்குக்கூடத்தான் கூட B அந்த இரவு மறந்த கனவாகவே போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/46&oldid=1741008" இலிருந்து மீள்விக்கப்பட்டது