44 தந்தையின் ஆணை ஒன்றுமில்லை, நீங்களும் மாமியும் பேசிக்கொண் டிருந்ததைக் கேட்டேன். நீங்கள் வீட்டை விற்கவேண் டாம். என் நகைகளை விற்று ஆஸ்பத்திரி வையுங்கள், - உறுதியான இந்தப் பதிலை உள்ள மகிழ்வோடு லீலா கூறினாள். ஆகா இவளல்லவா பெண் - என்று மனதிலே எண்ணி மகிழ்ந்தான் நடராஜன். அதுமட்டுமா? "லீலா! வீட்டை விற்பேன் என்று விளையாட் டாகத்தான் சொன்னேன். பணத்தைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். நான் எப்படியும் ஏற்பாடு செய்து விடுவேன். நீ நகையெல்லாம் எடுத்து முன் போல போட்டுக்கொள்." இப்படி நடராஜன் உறுதியாகக் கூற, லீலா அங் கிருந்து உள்ளே சென்றாள். 15. என்ன காலமோ? அன்று இரவு மணி பதினொன்று இருக்கும். நிர்மல் மாக இருந்த வானம் கூட அன்று மேகம் சூழ்ந்திருந்தது. சேகர் வான வெளியைப் பார்த்துக்கொண்டே பிடில் வாசித்துக்கொண்டிருந்தான். வானத்தில் மேகம் குமுறியதைப் போல சேகர் உள்ளத்திலே மோக வெறி அன்று தலைவிரித்தாடியது. அந்த இரவில் அந்த பிடிலின் கானந்தான் அவன் மன திற்கு சாந்தி அளித்தது. என்னதான் சாந்தி இருந்தாலும் ஒரு பக்கம் சஞ்சலம் இருந்து கொண்டே அவனை வாட்டின, கையிலே வெண்ணை: ஆனால் நெய்க்கு பஞ்சம்: இந்த நிலை விசித்திரமில்லையா? கல்யாணமாகியும் பிரம்
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/45
Appearance