உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தந்தையின் ஆணை . ஆம்!... மறந்துபோனேன் ! சேகர்... சேகர் !” பெரிய புயல்: 'விர்விர்' என்ற சப்தம். 'படார் படார்' என்று ஜன்னல் கதவுகள் மோதின. சுவரில் மாட்டப்பட்டிருந்த சேகர் படம் கீழே கீழே விழுந்து உடைந்தது. "ஐயோ. சுவாமி! என்று அலறிக்கொண்டே படத்தைக் கையில் எடுத்தாள் லீலா! 'தம்பி! தம்பி!"--என்று கதறிக்கொண்டே நடராஜன் வெளியே ஓடிவந்தான். காற்றிலே ஒடிந்த பெரிய மரக்கிளை நடராஜன் தலையிலே விழுந்தது. அம்மா " என்று கீழே விழுந்தான். குமார் ஓடிப்போய் தூக்கினான். நடராஜன் மண் டையில் இரத்தம் பீறிட்டு வந்தது. நடராஜன் மனைவி பார்வதியும் 'ஓ வென அழ ஆரம்பித்தாள். 61 இது என்ன காலமோ?- என் - என்று சொல்லி வள்ளி ம் யம்மாளும் அழுதுகொண்டிருந்தாள். தான். அப்போது லீலா வீட்டில் இருந்து ஒருவன் ஓடிவந் அம்மா! அம்மா! லீலாவின் தகப்பனார் மார டைப்பால் திடீரென்று இறந்துபோனார்" என்று செய் தியை அறிவித்தான். ஐயோ அப்பா! என்னை இந்த நிலையிலா விட்டுச் செல்கிறீர்கள்?" அணைபோட முடியாத துக்கத்தால் லீலா அழுதாள். ஒருபக்கம் பிரிந்து செல்லும் கணவன்: மறுபக்கம் தகப் பன்! என்ன செய்வது? எல்லோரும் உடனே லீலா வீட்டுக்குச் சென்றனர் துக்கம் விசாரிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/51&oldid=1741013" இலிருந்து மீள்விக்கப்பட்டது