ஆசைத்தம்பி 55 இதற்கு பதில் சொல்லவில்லை ; பதுமைப் போல் அசையாதிருந்தான். "ஐயோ! பெற்ற தாய் கூட செத்து விட்டாள்!" என்று ஈனத்தனமாகப் பொய் சொல்லி விட்டேனே, என்று அவன் மனதில் வேதனைத் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆனால்? தே நேரத்தில் லீலாவின் தந்தை. ஆம் சேகரின் மாமனார், பாலைவன மயானத்தில் எரிந்துகொண்டிருந்தார். 17. அலை மோதுதே! 1 லீலாவின் அழுகை அன்றோடு நின்றுவிடவில்லை அவள் அழுகை ஓர் தொடர் கதையாக மாறியது. தொடர் கதையிலே பல சம்பவங்கள் வருமல்லவா? அதைப் போலவே ஒரு நாள் தந்தைக்காகவும், இன்னொரு நாள் தாய்க்காகவும், தன் நிலைக்காகவும் அழுவாள்; ஆனால் இரவெல்லாம் சேகருக்காக அழுவாள். லீலாவின் முகத்திலே சதா சோக மேகம் குடிகொண் டிருந்தது; தன்னுடைய வருத்தம் மற்றவர்களுக்குத் தெரியாதபடி மறைப்பதற்கு எவ்வளவோ முயற்சித்தாள். நெருப்பை துணிக்குள்ளே மறைத்தால், துணி எரியும் புகை தெரியுமல்லவா? அதைப் போலவே லீலாவின் முகத்திலே அவளின் உள்ளக் குமுறல் அப்படியே பிரதி பலித்தது. இந்தக் காட்சியைக் காணச் சகிக்காத வள்ளியம் மாள் மருமகளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னாள். வயிற்றுப் பசிக்கு பழைய கஞ்சி வேண்டுமானால் ஓரளவு ஆறுதல் தரலாம். வெறும் வார்த்தைகள் ஆறுதல் .
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/56
Appearance