உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தந்தையின் ஆணை தருமா? கணவனை பிரிந்த லீலாவுக்கு 'கவலைப்படாதே' என்ற வார்த்தைகள் ஆறுதல் அளிக்குமா? கண்ணீர் விட்டுக்கொண்டே தான் இருந்தாள் 'லீலா. “நடராஜா! நம்ப சேகரை எப்படியாவது தேடி அழைத்து வா ! இது தாய் பாசத்தின் வேண்டுகோள். "பேசாமல் இருங்கள் போனவன் திரும்பிவருவான்," முன் கோபத்தின் முடிவான பதில். பாவம்! வள்ளியம்மாள் என்ன செய்ய முடியும்? பல தடவை நடராஜனிடம் சொல்லிப் பார்த்தாள். ஒரே பிடிவாதமாக நடராஜன் மறுத்து விட்டான். ஆனால் சேகர் சென்றதிலிருந்து நடராஜனும் நடைப் பிணமாக வே வாழ்ந்து வந்தான். நாடார் குடும்பத்தில் ஒருவன் குறைந்தது வானத்தில் மேகங்களுக்கிடையே அரைகுறை சந்திரன் பிரகாசிப்பது போலவே தோற்றமளித்தது. பௌர்ணமி வராமலா போகும்? இந்த எண்ணத்தில் நாட்கள் கடந்து கொண் டிருந்தன. ஆனால்-லீலா நாளுக்கு நாள் கவலையால் தேய்ந்து மெலிந்து கொண்டே வந்தாள். இதை புரிந்து கொண்ட நடராஜன், லீலாவுக்கு ஆறுதல் அளிக்கப் புத்தகங்கள் படிக்க ஏற்பாடு செய்ய நினைத்தான். விருதுநகர் முனி சிபல் லைப்ரரியில் மூன்று ரூபாய் கட்டி தான் ஒரு அங்கத் தினராகச் சேர்ந்தான் ; தேவையானப் புத்தகங்களைப் படிக்க வசதியும், தேவையில்லாதபோது பணத்தைத் திருப்பிப் பெற்றுக்கொள்ளவும் அங்கு ஒரு வாய்ப்பு இருந்தது. நிறைய நாவல்களை லீலா படிக்க நட்ராஜன் ஏற்பாடு செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/57&oldid=1741019" இலிருந்து மீள்விக்கப்பட்டது