உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 57 நாவலில் வருகிற பல சம்பவங்கள் தன் வாழ்க்கை யில் நடந்ததாக இருக்கக்கண்டாள். கஷ்டப்படுகிற கதாபாத்திரங்களெல்லாம், தான் என்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டதால், புத்தகப் படிப்பில் அவளுக்கு புது வேதனைதான் தோன்றியது. ஆனால்- மராட்டிய அறிஞன் காண்டேகர் எழுதிய சில புத்தகங்களை லீலா படித்துப் பல உண்மைகளை உணர்ந்தாள். குழந்தைகள் பொம்மைகளோடு சதா விளையாடு வதைப்போல என் கணவர் என்னோடு மரக்கட்டையா ? " நான் என்ன இதிலே யார் குற்றவாளி? கணவனா, மனைவியா? அல்லது அவ்விருவரையும் புருஷன் மனைவியாக்கிய சமூகமா? கட்டுக்கடங்காத கணவன் கதி என்ன? இந்தக் கணவரின் ரகத்தைச் சேர்ந்தவரா என் சேகர் ?... இல்லை! இல்லை! பல மாதங்களுக்குப்பின்- ஏன், வருடங்களுக்குப்பின். என் பக்கத்திலே வந்தார். தழுவும் கொடியாக இருக்கவேண்டிய நான், பாழாய்ப் போன வெட்கத்தால், படர மறுத்தேன்; அறுபட்டு நிற்கிறேன். காண்டேகரின் சிறு தீப்பொறி லீலாவின் அறிவுக் கண் இமையை சிறிது திறக்கவைத்தது. லீலா. இன்னொரு ஆசிரியரின் புத்தகத்தைப் புரட்டினாள் கனகமணி கட்டிலிலே, கரிய கூந்தலை விரித்துப் போட்டு, கலங்கிய கண்களோடு காதலன் வரவுக்காக காத்திருக்கிறாள் காதலி !- என்றெல்லாம் கற்பனை உலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/58&oldid=1741020" இலிருந்து மீள்விக்கப்பட்டது