88 தந்தையின் ஆணை காதலிகளைப்பற்றி வரைந்து தள்ளுகிறீர்களே, உண்மை யில் நீங்கள் எழுதுகிற மேஜைக்குப் பக்கத்திலே, பெரு மூச்சோடு உறங்குகின்ற உங்கள் மனைவியின் உள்ளத்தை நீங்கள் உணர்ந்ததுண்டா? 3 ஐயோ ! என் சேகர் உள்ளத்தை நான்தான் உணர் வில்லை. அந்த பெருமூச்சு, கலங்கிய கண்கள் விம்மும் இதயம், ஏக்கம், துக்கம் ஆகிய அனைத்தும் அன்று இருந்ததில்லை. இன்று இருக்கிறது. அன்று தூக்கம் இருந்தது: ஆனால் இன்று? அழுகிறேன்: அழுது கொண்டிருக்கிறேன். இப்படிப் புலம்பினாள் லீலா; புத்தகப் படிப்பின் பயனாக புதுப்புதுக் கனவுகள் கண்டாள். வண்ணமலர் வாடிக்கொண்டே வந்தது: புதுமைப் புஷ்பம் பொசுங் கிக்கொண்டே வந்தது. இந்தக் காட்சிகளைக் கண்ட வள்ளியம்மாள் படுக்கை யிலே படுத்தாள்: காய்ச்சல் அவளைக் கட்டிப்பிடித்தது: இருமலும் இடைவிடாது அவளை வாட்டியது. " சேகர் ! சேகர்!" இந்த சோகக்குரல் ஈனஸ்வரத்தில் அடிக்கடி எழுந் தது. நடராஜன் ஏதோ நாட்டு வைத்தியம் செய்தானே தவிர சேகரை தேடவேண்டுமே என்று அவன் மனது நாடவில்லை. அதற்குக் காரணம் அவன் பைத்தியம் போல் காட்சியளித்தான். ஆஸ்பத்திரி! ஆஸ்பத்திரி ! " இது நடராஜனின் அன்றாட புலம்பல்!
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/59
Appearance