உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 18. என் எண்ணம்போலே? 59 நளினாவுக்கும் ஆஸ்பத்திரி வைக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. சம்பளத்திற்கு வேலை செய்யும் சர்க்கார் உத்தியோகமும், பிற டாக்டர்களின் உத்திரவுப்படி ஊழியம் செய்யவும் நளினாவுக்கு ஆரம் பத்திலிருந்தே சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆஸ்தி நிறைய இருப்பதால் ஆஸ்பத்திரி எப்படியும் வைக்க முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அதோடு ஆதரவுக்கு சேகர் இருப்பதை அறிந்து ஆண், பெண் இரு பாலர்களுக்கும் சேவை செய்து, ஆஸ்பத் திரியை திறம்பட நடத்த முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. பரீட்சையிலும் இருவரும் முதல் தரமாகத் தேறி டாக்டர் பட்டமும் பெற்றனர். அந்தத் தொழிலுக்குரிய பயிர்ச்சியும் இருவர் சேர்ந்தே பெற்றனர். இருவருக்கும் வெளியில் நல்ல கிராக்கிகள் மோதின. அதில் ஏதாவது ஒரு வேலையைத் தான் போய்ப் பார்ப்பதாக நளினாவிடம் கூறினான் சேகர். அதற்கு நளினா சம்மதிக்காமல் இருவரும் சேர்ந்து ஒரு ஆஸ்பத்திரி நடத்தலாம் என்று யோசனை கூறினாள். அதை சேகர் ஒப்புக்கொண்டதும், எந்த ஊரில் ஆஸ்பத்திரி திறக்க ஏற்பாடு செய்யலாம் என்ற பிரச்னை கிளம்பியது. ஏதாவது ஒரு கிராமத்திலே ஆஸ்பத்திரி வைக்கலாம் என்று நளினா யோசனை சொன்னாள். அதை சேகர் ஒத்துக்கொள்ளவில்லை. பலமாக ஆட்சேபித்தான். நியாயமான சில காரணங்கள் கூறி அதுமட்டுமல்ல, திருமங்கலத்திலேயே அதற்குத் தக்க 8 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/60&oldid=1741022" இலிருந்து மீள்விக்கப்பட்டது