ஆசைத்தம்பி 61 பார்கள். ஆனால் இருவரிடத்திலும் அந்தக் குணம் இல்லாததால், ஆஸ்பத்திரி நல்ல வருமானத்தோடு நடக்க ஆரம்பித்தது. . ஒரு நாள் நடராஜனும், வள்ளியம்மாளும் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். உதவிக்கு லீலாவும் உடன் வந்திருந்தாள். வள்ளியம்மாள் மிகவும் மெலிந்து காணப் பட்டாள். விருதுநகர் புது ஆஸ்பத்திரியில் நல்ல மருந்து கொடுப்பதாக சுற்றியுள்ள கிராமம் பூராவும் செய்தி பரவி இருந்தது. அதைக் கேட்ட பின்பே நடராஜன் தன் தாயாரை அழைத்து வந்தான், தன் அருமைத் தம்பி. சேகர் அங்கு இருப்பதாக அவனுக்கு தெரியவே தெரியாது. வள்ளியம்மாளை உள்ளே அழைத்துச் சென்றான் நட ராஜன். சேகர் இருக்கிற பக்கமே கூட்டிச் சென்றான்; லீலாவும் கூடச் சென்றாள். எதிரே வந்த நர்ஸ் அவர்களை தடுத்து நிறுத்தி, பெண்களுக்கு இந்தப் பக்கமல்ல ' என்று கூறி வேறு பக்கம் அழைத்துச் சென்றாள். வழக் கம்போல் நளினா நன்கு கவனித்து அனுப்பி வைத்தாள். $ இப்படியே நோயாளிகள் பெருகினர் : பணமும் பெருகியது, சொந்த இடங்கள் சில நளினா வாங்கினாள். ஓய்ந்த நேரத்தில் சேகர் மருந்துகளை ஆராய்ச்சி செய் வதிலே ஈடுபட்டான். பெரும் நோய்களை தடுப்பதற்கு சிறந்த மருந்துகளை தயாரிப்பது அவன் லட்சியமாக இருந்தது. முயன்றால் முடியாதது ஒன்று உண்டா? பார்வை இழந்த கண்களுக்கு ஜீவசக்தி அளிக்கும் அற்புத மருந்து ஒன்று கண்டு பிடித்தான்; அதை அரசாங்கம் பல பரீட்சைக்குப் பின் அங்கீகரித்ததோடு, சேகருக்குக் கௌரவப் பட்டமும் சூட்டியது. மாகாணத்தில் உள்ள I
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/62
Appearance