உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 65 ருந்த சாக்கடையிலே அந்தப் பணப்பை விழுந்தது; விழுந்து விட்டதே என்று அந்தப் பையன் அழுது கொண்டே நின்றான். " ஏண்டாகண்ணு அழுகிறாய்"-என்று கேட்டுக் கொண்டே தாய் அங்கே வர, பையன் சாக்கடையை காட்டி கையை நீட்டினான்; லட்சுமி உள்ளே பார்த்தாள். அழுக்கு தண்ணீர் தெரிந்ததே தவிர வேறு எதுவும் காணப்படவில்லை : ஆனாலும் பையன் அழுதுகொண்டே இருந்தான். ஏதோ விழுந்திருக்கவேண்டும் என்று கருதிய லட்சுமி, காலைவிட்டுப் பார்க்கலாமே என்று கீழே இறங்கினாள்; ஆனால் அப்போது வந்த குமார்- "ஏன் சாக்கடையில் காலைவிடப் போகிறாய்"என்று கூறி தடுத்துவிட்டான். குழந்தை மேலும் அழுதது. பணத்திற்கு என்ன செய்வது என்று வேதனைப் பட்டுக்கொண்டிருந்த குமா ருக்கு கோபம் வந்தது; குழந்தையை அடித்தான். "பிள்ளை இல்லாமல் சிலர் வேதனைப்படுகிறார்கள், நீங்கள் இப்படி அடிக்கிறீர்களே- என்று லட்சுமி குழந்தையை வாரி முத்தமிட்டாள். இதைக்கண்ட நடராஜன் மனைவி பார்வதிக்கு. குழந்தையில்லையே என்ற வருத்தமும். பொறாமையும் ஏற்பட்டது. தனக்கு குழந்தை இல்லாததை நினைத்து கவலைப்பட்டாள். 20. மற்றொரு பிரிவு ! இதேசமயத்தில் விருதுநகரிலே ஒரு சாமியார் வெற்றிலை ஒருவன் வந்திருந்தான். அவன் தாம்பூல் எச்சிலை எந்தப்பெண் குடித்தாலும் கருதரித்துவிடுவார்கள் என்ற கட்டுக்கதை மக்களிடம் பரவி இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/66&oldid=1741028" இலிருந்து மீள்விக்கப்பட்டது