64 தந்தையின் ஆணை தன் குடும்ப நிலையை எண்ணி, மனம் கொந்தளித்து, பேதளித்து இருந்த நடராஜன் மௌனமாக பிணம்போல நடந்தான். ஆவலோடு எதிரே வந்தான் குமார். அண்ணா! பணம் தருகிறீர்களா? குமாரின் கேள்வி, குத்தூசியால் குடலில் குத்தியது போல் இருந்தது. நடராஜன் என்ன சொல்வது என்று கலங்கினான்.
தம்பி! கைவசம் பணம் இல்லை ! இந்தப் பொய்யை நடராஜன் எப்படியோ சொல்லி விட்டான்; தலைமேல் பெரிய சுமையாக மலைபோன்ற ஒரு பொருள் இருந்தது அதை கீழே இறக்கிவிட்டால் எப்படி இருக்குமோ அப்படி காட்சி அளித்தான் நடரா ஜன், தம்பியை சமாதானப்படுத்தி அனுப்பிய உடன். 64 பணத்திற்கு என்ன செய்வதோ என்ற வேதனை யோடு குமார் அங்கிருந்து சென்றான். குமாரின் குழந்தை தேவராஜன் அப்பா' என்று சொல்லிக்கொண்டே., பெட்டி இருந்த அறைக்கு வந்தான். அப்பாவை காணா மல் அங்கேயே விளையாட ஆரம்பித்தான். பெட்டி பூட்டை பிடித்து தேவராஜன் ஆட்டினான். அது சரியாக பூட்டப்படாத்தால் திறந்துகொண்டது. பெட்டி திறக்கப்பட்டது, அந்த பணப்பை குழந்தையின் கைக்கு வந்தது, அதை கையில் வைத்துக்கொண்டே தேவராஜன் விளையாடிக்கொண்டு அறைக்கு வெளியே வந்தான். அந்தப் பணப்பையை கீழே போடுவதும் எடுப்பது மாக சிரித்து ஆடிக்கொண்டே இருந்தான் குழந்தை தேவராஜன். வீட்டின் ஓரத்திலே சென்றுகொண்டி