உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 63 பெரும்பாலோர் கடன் வாங்கும் கர்ண பரம்பரையைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். எந்த சாமான் கடையில் இல்லை என்பதை அறிந்து உடனுக்குடன் வாங்கி விற்க வேண்டிய வேலை குமாருக்கு இருந்தது. தன் ஒண்ணரை வயது மகனான தேவராஜனின் மழலைப் பேச்சைக் கேட் கக்கூட அவனுக்கு நேரமில்லை. அன்று குமாருக்கு இருபது ரூபாய் அவசரமாகத் தேவைப்பட்டது. கடன் புள்ளிகளை தேடிக்கொண் டிருந்தால் கடையை மூடிவிட நேரும் என்பதை குமார் உணர்ந்தான். மேல்கொண்டு சாமான்கள் வாங்கி வைக்க ரூபாய் இருபது குறைவாக இருந்தது. 'அண்ணா! இருபது ரூபாய் இருந்தால் கொடுங்கள். அவசரமாகத் தேவைப்படுகிறது. இப்படி நடராஜனிடம் குமார் கேட்டதும் 'இதோ தருகிறேன் '- என்று சொல்லிவிட்டு, பணத்தைக் கொண்டுவந்துதர உள்ளே சென்றான் அப்போது அவன் மனைவி பார்வதி அங்கே வந்தாள். • எதற்காக பணத்தை எண்ணிக்கொண்டிருக் கிறீர்கள்?" .. தம்பி குமாருக்கு இருபது ரூபாய் வேண்டுமாம்! ஆமாம்! உங்களுக்கு வேறு வேலை இல்லை. இப் படியே கொடுத்துக்கொண்டிருந்தால் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்....... பணம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.' R கோபமாக கூறிய பார்வதி நடராஜனிடமிருந்து பணப்பையை பறித்து, பெட்டியினுள் போட்டு பூட்டி சாவியை கையில் வைத்துக்கொண்டாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/64&oldid=1741026" இலிருந்து மீள்விக்கப்பட்டது