உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - கற்களைக் கண்டு கடவுள்களெனக் கொண்டு, பொய்களைக் கேட்டு வேதங்களென நினைத்து, ஆரியம் விரித்த மாய வலையில்-சதிகார பார்ப்பனீயம் தூவும் வஞ்சகத்தூபப் பொடியில் - பெற்றிருந்த த தன் மானத்தையிழந்து, கொண்டிருந்த பகுத்தறிவைப் பறக் கடித்து, அடைந்திருந்த நாணத்தை நசுக்கிவிட்டு, போற் றியிருந்த வீரத்தை வீரட்டி, ஆரியமிட்ட கட்டளையே சட்டமாக நினைத்து, அது சொன்ன நஞ்சு கலந்த வாக் கையே வேதவாக்காகக் கருதி, இன்று அனாதையாய், திக்கற்ற பேதையாய், சீரழிந்து பொலிவிழந்து காணும் உன் திராவிடத்தின் உன்னதமான அழைப்பு! ஏன்? உயிர் போகும் நிலையில் உன்னை ஈன்றெடுத் தத் தாயகம் உன் உள்ளத்தைத் தொடும்படி வாய்விட்ட ழைக்கிறது! ஏன் ? மரணப்பிடியில் சிக்குண்டு உயிரி முக்கும் நிலையில் உன்னைப் பெற்றெடுத்த தாயகம் உன் மனதில் படும்படி இரத்தக் கண்ணீர் விட்டு அழைக் கிறது ! எங்கே அழைக்கிறது? எதற்காக அழைக்கிறது? அன்று இமயத்தில் வீரக் கல் நாட்டித் திராவிடக் கொடியைப் பறக்கவிட்ட திராவிடம் இன்று வட நாட் டுக் கொடிக்கு மண்டியிட்டு மடியேந்திப் பிழைக்கிறதே ! உனக்குத் தன் மானமில்லையா? அன்று காட்டுக் கூச்சல் போட்டு மந்திரம் பல சொல்லி போர்க்கோலம் பூண்ட வடநாட்டுப் படையைப் பிணக்கோலம் பூணச் செய்த திராவிடம் இன்று வட நாட்டு அரசாட்சிக் காலடியில் மிதியுண்டு உயிர்போகிறதெனத் துடிக்கிறதே ! உனக்கு வீரமில்லையா ? அன்று தரணியிலே புகழ்பெற்று, மக் களால் புகழ் பரணி பாடப்பட்டு கடல் கடந்து பொரு ளீட்டிய திராவிடம் இன்று வடநாட்டு வாணிகப் பதர் களின் பண்டங்களுக்குப் பரிதவிக்கிறதே! உனக்கு நாண மில்லையா?