உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அஞ்சல் நிலையங்களை தகதக வெனக் கொளுத்திக் கொழுந்து விட்டெரியும் தீயைக் கண்டு ஆனந்தமடை வது, தண்டவாளங்களைப் பெயர்த்துத் தடதடவென ஓடிவரும் ரயிலைக் கவிழ்த்து ஏதுமறியா நிரபாரதிகளின் உயிரையும். குருதியையும் குடித்துச் சுவைத்துக் களிப் பது, தந்திக்கம்பிகளை அறுப்பது அல்ல அண்ணா டும் அறப்போர் ! காட் கட்டுப் பாட்டைக் கேடயமாகக் கருதி, ஒழுக்கத்தை வாள் என நினைத்து, நேர்மையை ஈட்டியாகக் கொண்டு, நியாயத்தை கவசமாக அணிந்து, 'திராவிடநாடு திராவி டர்க்கே ! அரசாண்ட இனம் மீண்டும் அரசாள்வதற்கே அறப்போர் !” என்ற திராவிட முரசை வான் அதிரக் கொட்டி, அணி அணியாக அலைபோல நின்று, 'வட நாட்டானே வெளியேறு' என்ற இதய பேரிகையை முழக்குவதே அண்ணாகாட்டும் அறப்போர் ! "எழில் மிக்க திராவிடம் உங்கள் உழைப்பைக் கேட்கிறது-உங்களுடைய வீரத்தால்தான் தன் தளைகள் ஓடிந்துபடும் என்று நம்புகிறது. அந்தத் திருப்பணிக்கே, உங்கள் ஆற்றல் பயன்படட்டும்—வேறுதிக்கு நோக்க வேண்டாம்'. நாட்டிலே பரவியுள்ள நச்சுக் கருத்துகளை வேரோடு களைந் தெறிய 'ஆரியமாயை என்னும் புத்தகத்தை எழுதி யதினால், எதேச்சத்காரத்தின் அடக்குமுறை வெறிக்குப் பலியாகி, உரிவைநாட்டிலே இன்ப வாழ்வை வைத்து திராவிடத்தின் நலனை உயிராக மதித்து திருச்சி சிறை யிலே அடைப்பட்டு, பண்ணிரண்டாம் நாள் சர்காருக்கு தெளிவு ஏற்பட்டு விடுதலை யடைந்த அண்ணாவின் கட் டளையை- அவர் சிறை புகுந்த போது உனக்களித்த பொன் மொழியை செயலிலே காட்டி திராவிடத்திற்குப் புத்துயிரளிப்பதே அண்ணா காட்டும் அறப்போர் !