38 துண்டா? கருத்திலே நாட்டம் கொண்ட துண்டா?" என்று, வற்றியதொண்டையில் அடிவயிற்றைப் பிடித் துக் கொண்டு கேட்பவனைக் கண்டு, ஏ திராவிடனே ! தன்மானம், வீரம், நாணயம், இவைகளை இழந்த திரா விடனே ! நீ சொல்கிறாய்:- வக்கிர "அவன் விஷமப் பிரசாரம் செய்கிறான். புத்தி கொண்ட வீணன் அவன்! வகுப்புவெறியன்; நம்பாதீர்கள் அவன் பேச்சை ! பதவி வெறிபிடித்தவன் ; பித்தன் ; கருத்திழந்து கதறுகிறான்!” என்று பாமரக் குடிகளிடம் கனைக்கிறாய். உன் குரலைக் கழுதைக்கு ஒப் பிட்டுப் பார்த்துக் கொள்கிறாய் ! தன்மானத்தின் மீது உனக்கு மதிப்பில்லாவிட்டால் நாணத்தின்மீது உனக்கு நாட்டமில்லாவிட்டால் பெற் றெடுத்த தாயகத்திற்கு நீ செய்த வஞ்சகத்தைக் கருதிப் பார் ! ஈன்றெடுத்த திராவிடத்திற்கு நீ புரிந்தத் துரோ கத்தை எண்ணிப்பார்! எண்ணிக்கூடப்பார்க்காதே ! உன் கூடப்பிறந்தவன்-உன் நாட்டான்-இன்பமாக வாழ, உன் தாயகம் தலை நிமிர்ந்து வாழ, உரிமையுடன் வாழ முயற்சிக்கும் முயற்சியில் நீ தீ மூட்டாதே ! வாள் வீசாதே ! வாய்ச் சொல்லும் சொல்லாதே ! கடாரம் திராவிடா! என்னருமைத் திராவிடா ! கொண்ட கன்னித் திராவிடா ! இன்பதிசை தெரியாமல் துன்பப்பாதையில் உடல் துவளும் அனாதைத் திராவிடா ! பதவிமோகத்தால் உன் இன்பவாழ்வை-உன் தாயகத் தின் நல் வாழ்வை—வதைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு உலாவும் உலுத்தர்களைக்கண்டு ஏங்காதே ! அஞ்சாதே! எழுந்து நில்! எழுந்து நில்; விசையுடன் நட; தலை நிமிர்ந்து பார்! உன் கண்களிலே தோன்றும் அறப்போர்-நம் அண்ணா காட்டும் அறப்போர்-இருக் கிறது உன் நளிந்த காலை நிமிர்த்தி வைக்க-உன் வளைந்த இடுப்பை சரிபடுத்த !
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/38
Appearance