உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ரூபாய்க்கும் கடைப்பொருளைப் போல விற்று வயிற்றைக் கழுவும் தாய் மார்களை திராவிடம் தோற்றுவிப்பதா? அதே நேரத்தில் திராவிடனின் உழைப்பை உறிஞ்சி வாழும் வடநாட்டான் தன் குழந்தைக்கு விதவிதமான பட்டுடைகளினால் ஆடையலங்காரம் செய்து உள்ளம் குளிர்வதா? உள்ளத்தை ஊடுரூவி உடலுக்குள் வேத னைப் புரையோடிப் போயிருக்கும் திராவிடத்தில் வேதனை மயமானக் காட்சிகள் எத்தனை, எத்தனை ? உள்ளத்திற்கு உவகையைத் தேடியளிக்க உல்லாசக் காட்சிகளைக் காணப் பெற்ற திராவிடக் கண்கள், வறுமையிருட்டறை யிலே அடைபட்டு அணுஅணுவாகத் திராவிடம் உயிரி ழக்கும் கொடுமையான காட்சியைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கிறதே! இரத்த குழாய்களில் வீர இரத் தம் துடிக்கிறதே !பச்சை நரம்புகளில் தன்மான உணர்ச்சி பாய்கிறதே ! "திராவிடன் இந் நாட்டிலே தலை நிமிர்ந்து சுந்தரத் தமிழல் இசையமுது கேட்டு, இன்பத்தை அள்ளிவீசும் தொணியிலே குளிர்ந்த நீரில் உல்லாசபவனி வந்து, கற்பை அணிகலனாகப் பெற்ற திராவிடப் பெண்மணி யின் பக்கத்திலே அமர்ந்து இன்ப உரையாடல்களை உரையாட வேண்டியவன் ; பசிப்பிணியினால் பருவத்தை யிழந்து, உடல் உருகி, எலும்புக் கூடாய், நடைப் பிணமாய் உலாவும் மனைவியைக் கண்டு மனம் வெதும்பி உலகவாழ்வின் மீது வெறுப்படைந்து. மண் ணுக்குள் உயிரில்லா உடலாகப் புதையுண்டு போகிறான். நம்பிய நங்கையை நட்டாற்றில் விடமுடியாதனாய் 'கள்ளன்' என்னும் குற்றத்தை சுமந்து சிறைக்குள் நுழைகிறான். கொலை செய்கிறான்-தூக்குமேடை ஏறுகிறான் ! ‘ஏன்?’ என்று நீ எண்ணிப் பார்த்ததுண்டா ? சிந்தித்ததுண்டா? அரசாண்ட தாயகம் அன்னியரின் இரும்புப்பிடியிலே அல்லல் படுகிறதே, எதற்காக என்று நீ கருதிய