36 யோடு அழிந்துப் போய்க் கொண்டிருக்கும் வேதனையான காட்சியை-உயிரைக் கொல்லும் இக் கொடுமையான காட்சியை-நீ கண்டு களிப்புரை கூறுவதா? கழுதையின் ஆட்சியினால் குதிரை குலை நடுங்கிச் சாவதா?" என்று கேட்கக் கூடாதா?" "தான் பிறந்த தாயகத்தில் பசியால் பதைபதைப் புற்றுத் திராவிடன் நடைப் பாதையிலே இறப்பதா? அதே நேரத்தில் அவனைக் கண்டு எள்ளி நகையாடி, எச் சிலைத் துப்பி, சிரிப்பைச் சிந்தி ஏழடுக்கு மாளிகையிலே வட நாட்டான் திராவிடத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொண்டு, உடலுக்கு உகந்த ஊர்வசிகளிடம் உவகை மொழி பேசி உன்னத வாழ்வு வாழ்வதா? ஈன்றெடுத்த திராவிடத்தில் விசை யொடிந்த திராவிடன் வாழவகை யற்று வாழ்வை இரண்டு முழம் கயிற்றிலே வதைத்துக் கொண்டிறப்பதா? அதே நேரத்தில் திராவிடனின் குருதியைக் குடித்து உடல் பெருத்து வட நாட்டான் முத்து பஞ்சணையிலே ஒய்யாரமாக அமர்ந்து தென்றல் காற்றை வாங்கிய வண்ணம் இல்லறத்து இனியாளோடு இன்ப மொழி பேசிக் கொண்டிருப்பதா? தங்கத்தை மங் கைகள் அறுவடை செய்த பொன்விளைந்த திராவிடத்தில் திராவிடன் உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில் லாமல், உயிர்துடிதுடித்துத் தூக்கிலே தொங்கி ஊஞ்ச லாடுவதா? அதே நேரத்தில் குருதியை வியர்வை நீரெ னக் கருதி. உழைத்துக் கட்டிய கண்வரும் கட்டிடங் களில், தங்கத்தால் ஊஞ்சல் கட்டி, வைரத்தால் தலையணை செய்து, இரத்தினங்களால் உணவுகளைச் சமைத்து வயி றார உண்டு உடலார உடையுடுத்தி ஆரணங்குகளின் முத் தப் பழங்களைச் சுவைத்து ஆனந்தமுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதா? பத்துமாதம் சுமந்துப் பெற்ற வைரக் கொடிக்குப் பால் கொடுக்க கதியற்று ஐந்து ரூபாய்க்கும், பத்து
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/36
Appearance