உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வட நாட்டானின் சுரண்டலுக்கும், அவனுடைய ஏகாதிபதித்ய பாசக் கயிற்றுக்கும், அதற்குத் துணையாக இருக்கும் 'எல்லோரும் இந்தியர்' என்னும் வஞ்சகத் திரையைக் கிழிப்பதற்கும், ஆரிய மாயையினால் ஆண் டான், அடிமை, ஜாதி என்னும் கோரக் கொள்கைகள், நஞ்சுக்கலந்த வார்த்தைகளைத் தீயிலிட்டுப் பொசுக்குவதற் கும், 'திராவிட இரத்தத்தை உறிஞ்சும் அன்னியர்களே ! தாயகத்தை விட்டு வெளியேறுங்கள்!" என்ற முரசை விண்ணதிரக் கொட்டுவதுமே அண்ணா காட்டும் அறப் போர் ! திரண்டெழுந்த மக்களின் உள்ளத்தில், அணைகட்டி யும் அடக்கமுடியாத பேரலையில்-குமுறலில்-உண்டாக் கப்பட்ட கோவிற் பட்டித் தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளத்திலே உறுதி பூண்டு, உடலிலே கங்கணம் கட்டி, தாய் நாட்டை அன்னியர்களின் அரசாட்சியிலிருந்து மீட் பதே. அண்ணாகாட்டும் அறப்போர் ! அன்று வடநாட்டு மந்திரி திவாகர், தாய் மொழியை வெட்டி வீழ்த்தி அதன் துடிதுடிப்பைக் கண்டு பரிகாசச் சிரிப்புச் சிந்தும் சழக்கர்கள்-துரோகிகள்-அவர்களுக்குப் பட்டமளிக்க, திராவிடத்தின் தன்மானத்திற்கு உலை வைத்துக் கொண்டிருப்பது போல் எழுந்து நின்று கொண்டிருக்கும் இந்தி பிரசார சபைக்கு வந்தபோது, ஆயிரமாயிரம். திராவிட வீரர்கள்- இளங்காளைகள். காரிகைகள்—'திவாகரே திரும்பிப்போ!' என்ற இதய ஒலியை-உன்னதமுரசை-விண்ணும் மண்ணும் அதிர முழக்கமிட்டு, கறுப்புக் கொடியைக் காட்டி திராவிடத் தின் அதிருப்தியைக் காட்டி-அவரைத் தலை குனிய வைத்து, ஒழுக்கத்தை இலட்சியமாகக் கொண்டு, கட்டுப் பாட்டைக் கொள்கையாகக் கருதி, அண்ணாவின் தலை மையிலே முதல் வெற்றி கிட்டியது. கோவிற்பட்டித்